அடுத்தவாரம் முதல் இந்தியாவிற்கு விமான முன்பதிவு தொடக்கம் : ஃப்ளை துபாய் அறிவிப்பு !

0

துபாயின் பட்ஜெட் விமான நிறுவனமான ஃப்ளை துபாய் அடுத்தவாரம் (ஏப்ரல்16)முதல் துபாயிலிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு பயணிகள் முன்பதிவு தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இருப்பினும் இருநாட்டு அரசுகளின் ஒப்புதலின்படிதான் விமான போக்குவரத்து தொடங்கப்படும் என்று அது தெரிவித்துள்ளது.முதற்கட்டமாக இந்தியாவின் முக்கிய நகரங்களான தில்லி,மும்பை,கொச்சி m,ஹைதராபாத்,லக்னோ மற்றும் சென்னைக்கும், பாகிஸ்தானின் முக்கிய நகரங்களான கராச்சி,பைசலாபாத் ,மற்றும் முல்தானுக்கு பயணிகள் விமானம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துபாயின் பிரதான விமான நிறுவனமான எமிரேட்ஸ் ஏற்கனவே குறைந்த அளவிலான பயணிகள் விமான இயக்கத்தை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.விமான போக்குவரத்து நிறுத்தத்தால் தற்போது ஆயிரக்கணக்கான இந்தியர் மற்றும் பாகிஸ்தானியர்கள் அமீரகத்தில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here