சிங்கப்பூரை விட்டு தமது தாயகம் திரும்ப அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள் விரும்புகின்றனர்.

0

சிங்கப்பூரில் கட்டுமானம் கப்பல் துறை என அனேக துறைகள் வெளிநாட்டு ஊழியர் வளத்தை கொண்டுள்ளது.

சிங்கப்பூரில் வெளிநாட்டவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த ஊழியர்களை நமது அனைத்து துறைகளிலும் கொண்ட ஒரு நாடு என குறிப்பிட முடியும்.

வெளிநாட்டவர்களை க்காக செயற்படுவதற்கான தொண்டர் அமைப்புக்கள் மற்றும் அரசு சார்ந்த அமைச்சகங்கள் என்பன சிறப்பாக செயற்பட்டு வருகின்றது.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றின் முதலாவது அலை அதிரடி திட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தி சிறிது காலம் பழைய வாழ்க்கையை மீண்ட சிங்கப்பூர் மக்கள் மீண்டும் தற்போது கிருமித் தொற்றின் இரண்டாவது அலை மூலம் சிங்கப்பூர் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

migrant-workers
Photo: Reuters/Feline Lim

இக் கிருமி தொற்றினால் சிங்கப்பூரர்கள் நிரந்தர வாசிகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் போன்ற அனைத்து பிரிவினரும் மிக மோசமாக பாதிப்படைந்தன. இதில் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்கள் வெளிநாட்டு ஊழியர்களை கிருமித் தொற்றின் அதிகளவில் அடையாளம் காணப்பட்ட போதும் தங்குமிட விடுதிகள் ஆகவே காணப்பட்டது இதனால் அவர்கள் சுமார் ஒரு வருடத்துக்கு மேலாக வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டு தனிமையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கிருமித்தொற்றின் முதலாவது அலை பாதித்த காலப்பகுதி மற்றும் முதலாவது அலைக்கும் இரண்டாவது அலைக்கும் இடைப்பட்ட காலப்பகுதிகளில் இந்தியாவில் இருந்து வருகை தந்த ஊழியர்களில் அனேகமானவர்கள் சிறப்பு விமான சேவைகள் மூலம் சிங்கப்பூரை விட்டு தமது தாயகம் நோக்கி வெளியேறினர்.

நோய் தொற்றினால் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது இதனால் வேலை இழந்தோர் மற்றும் மீண்டும் தாயகம் திரும்ப நினைத்தவர்கள் தாய்நாட்டிற்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். எனினும் ஜனவரி இறுதி மற்றும் பெப்ரவரியில் இந்தியாவுக்கு இடையிலான விசேட விமான சேவை மீண்டும் ஆரம்பமானது. இதற்கான விமான டிக்கெட்டுகள் ஒன்லைன் மூலமாக முற்பதிவுகள் செய்யப்பட்டன.

இதனால் இந்திய ஊழியர்கள் அதிகமானவர்கள் தனது தாயகம் திரும்பினர். இவ்வாறு விரும்புவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணமே உள்ளது. பெப்ரவரி 6ஆம் திகதி வரை 8598 பேர் சிங்கப்பூரை விட்டு வெளியேறி இந்திய சென்றனர். இத் தொகையானது இன்றுவரை அதிகரித்த வண்ணமே உள்ளது.

இவ்வாறு அதிகமான ஊழியர்கள் சிங்கப்பூரில் இருந்து வெளியேறி கொண்டு உள்ளனர். சிலர் நோய்த்தொற்றின் அச்சம் மற்றும் நோய்த்தொற்றின் காரணமாக வேலையை இழந்து தவிர்த்தவர்கள் என பல்வேறு காரணங்கள் ஊழியர்கள் சிங்கப்பூரை விட்டு வெளியேற காரணமாக இருந்துள்ளன. சென்ற வருடம் மாத்திரம் 11000 திற்கும் அதிகமான ஊழியர்கள் வேலையை இழந்தனர்.

இந்நிலையில் கிருமித் தொற்றின் இரண்டாவது அலை சிங்கப்பூர் மற்றும் இந்தியாவை மிக மோசமாக பாதிப்படந்து வருவதால் இரு நாடுகளுக்குமான எல்லைகள் முழுவதுமாக மூடப்பட்டது.

இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான விமான சேவை முழுமையாக பாதிக்கப்பட்டு சர்வதேச பிரயாணங்கள் தடைபட்டு உள்ளன.

எனினும் சிங்கப்பூர் வருகை தந்த இந்திய ஊழியர்களில் அனேகமானவர்கள் மீண்டும் தமது தாயகம் எப்போது திரும்புவோம் எப்போது எல்லைகள் திறக்கப்படும் என்ற எண்ணத்திலேயே உள்ளனர்.

இவர்கள் இவ்வாறு தமது தாயகம் திரும்ப விரும்ப காரணமாக கிருமித் தொற்றின் காரணமாக ஒரு வருடத்திற்கு மேலாக வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டு தங்கும் இடத்திலேயே தனிமையில் கிடந்ததால் ஏற்பட்ட மன வருத்தம் மற்றும் போதிய அளவு சம்பளம் ஒழுங்கான முறையில் கொடுக்கப்படாமல் போன்ற அனேக காரணங்கள் இவ்வாறு மீண்டும் அவர்கள் நாடு சிறந்த காரணங்களாக அமைந்துள்ளன.

சிங்கப்பூரின கிருமித்தொற்று நிலவரம்

இந்தியாவில் கிருமித்தொற்று நிலவரம்

இன்றைய சிங்கப்பூர் நாணய மாற்று வீதம்

Leave a reply

Please enter your comment!
Please enter your name here