அதிக உயிரிழப்புக்கு காரணம் ஹைரொக்சி குளோரோகுய்ன் – அமெரிக்கா தகவல்..!

0

இலட்சக் கணக்கான உயிரிழப்புக்களை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மலேரியா காய்ச்சலுக்கு பயன்படுத்தப்பட்ட குளிசை நல்லது என சமீப நாட்களாக தகவல்கள் வெளிவந்திருந்தன.

அதனையடுத்து இந்தியாவில் இருந்து 3 கோடி ஹைரொக்சி குளோரோகுய்ன் எனப்படும் மலேரியா தடுப்புக் குளிசையை , மிரட்டி அமெரிக்க அரசு இறக்குமதி செய்தது.

ஆனால் ,அதனால் பலனில்லை என்று இப்போது தெரியவந்துள்ளது.இந்நிலையில் ,மருத்துவ விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கைகளில் ,ஹைரொக்சி குளோரோகுய்ன் குளிசையை அசித்ரோமைசினுடன் சேர்த்து பயன்படுத்தினால் கொரோனா பாதிப்பு குறையும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை,’ என தெரிவித்துள்ளது.

மேலும் ,அமெரிக்காவில் கொரோனாநோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஹைரொக்சி குளோரோகுய்ன் குளிசையினால் அதிக மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து டிரம்ப் கூறும் போது ,இது பற்றி ஒன்றும் தெரியவில்லை ,சில நல்ல அறிக்கைகளும் உள்ளன. ஆனால் ,இது நல்ல தகவல் அல்ல ,இது தொடர்பாக நாம் விரைவில் முடிவு எடுப்போம் ,”என்றார்.

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் நிதி உதவியுடன் நடத்தப்பட்ட ஆய்வில் ,ஹைரொக்சி குளோரோகுய்ன் மூலம்தான் மரண விகிதம் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையில் ,கொரோனா சிகிச்சைக்கான மாதிரிகள் தற்போது ஆய்வுகளில் உள்ளன , ஹைரொக்சி குளோரோகுய்ன் அல்லது குளோரோகுயினை கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தலாமா என்பது பற்றிய மருத்துவ புள்ளிவிவரங்கள் இல்லை’எனகூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றைக் குணப்படுத்துவதற்காக இந்தியாவிடம் இருந்து ஹைரொக்சி குளோரோகுய்ன் குளிசை பாவிப்பதாலேயே அமெரிக்காவில் அதிகமான உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன என அமெரிக்க ஊடகமான பொக்ஸ் நியூஸ் ஒரு அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது.

இலங்கை உட்பட்ட பல நாடுகளுக்கு இந்தியா ஹைரொக்சிகுளோரோகுய்ன் மருந்தை ஏற்றுமதி செய்யவுள்ளதாக இரு வாரங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து பரசிட்டமோல் மற்றும் ஹைரொக்சிகுளோரோகுய்ன் ஆகிய மருந்துகளின் ஏற்றுமதி தடைகளை நீக்குவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது .

ஏற்கனவே இந்த மருந்துகளுக்கு இந்தியா தடைவிதித்தது . இந்தியாவே இந்த மருந்துக்களுக்கான பிரதான ஏற்றுமதியாளராக விளங்குகிறது.

மலேரியாவுக்கு எதிரான மருந்தான ஹைரொக்சிகுளோரோகுய்ன் மருந்து பிரதான உற்பத்தியாளராக இந்தியாவே விளங்குகிறது.

இதுவரையில் இந்த மருந்துகளை அனுப்புமாறு இந்தியாவிடம் சுமார் 20 நாடுகள் கோரிக்கைகளை விடுத்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here