அமீரகம் அனுமதித்த இந்த தடுப்பூசி போடுபவர்களே அமீரகம் வர முடியும்..!

0

நீண்ட காலமாக இந்தியா,இலங்கை போன்ற நாடுகளுக்கான விமான பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தது.

இத் தடையால் பலர் தமது வாழ்வாதாரத்திற்காக அமீரகம் வர முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

தற்போது அமீரகம் ரெசிடென்சி விசாவையுடைய இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு அமீரகம் வர அனுமதி வழங்கியுள்ளது.

இவர்கள் அமீரகம் வர தடுப்பூசியின் இரண்டு டோஸையும் போட்டிருக்க வேண்டும்.

செல்லுபடியாகும் ரெசிடன்சி விசா மற்றும் தடுப்பூசியின் இரண்டு டோஸையும் உடைய பயணிகள் சிங்கப்பூர் வர ICA விடம் விண்ணப்பிக்க முடியும்.

அமீரகம் வருபவர்கள் அமிரஹ் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டிருக்க வேண்டும்.

அமீரக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி வகைகளாக பைசர்,சினோபார்ம்,மாடர்னா, ஸ்புட்னிக் வி,கோவிஷீல்டு அல்லது ஆஸ்ட்ரா ஜெனக்கா போன்றனவாகும்.

அமீரக அரசு விதித்துள்ள விதிமுறைகளை ஒவ்வொரு பயணிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதனை உறுதி செய்த பின்பே விமான நிறுவனங்கள் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகமானது இந்தியர்களை அமீரகம் வர அனுமதி வழங்கியதற்கு நன்றி தெரிவித்துள்ளது.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here