அமீரகம்-இந்தியா இடையிலான விமான டிக்கெட் விலை வீழ்ச்சி..!

0

அமீரகம்-இந்தியா இடையிலான விமான டிக்கெட் விலை வீழ்ச்சி..!

இந்தியாவில் நோய்த்தொற்று இரண்டாவது அலை மிக மோசமாக பாதித்தது.

இதனால் அமீரக பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையம் இந்தியாவில் இருந்து அமீரகம் வரும் பயணிகளுக்கு தடை விதித்துள்ளது. இத் தடையானது பல்வேறு தடவை நீடிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு இந்தியாவில் இருந்து அமீரகம் வரும் பயணிகள் விமானம் தடைப்பட்டு காணப்பட்டாலும் அமீரகத்தில் இருந்து இந்தியா நோக்கி விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இந்தியாவில் இருந்து அமீரகம் வர தடைவிதிக்கப்பட்டதால் அமீரகத்தில் இருந்து இந்தியா செல்வதற்கான விமான டிக்கெட்களின் விலை குறைவடைந்துள்ளது.

எனினும் அமீரகத்தில் இருந்து இந்தியா செல்ல அச்சப்படுகின்றனர்.ஏனெனில் விமான தடை காரணமாக இந்தியா திரும்பினால் மீண்டும் அமீரகம் திரும்ப முடியாது என்பதனால் ஆகும்.

தற்போதைய டிக்கெட் விலை…
துபாய் புதுடெல்லிக்கான விமான
டிக்கெட்கள் 347 திர்ஹம்
துபாயிலிருந்து மும்பைக்கான விமான
டிக்கெட் 285 திர்ஹம்
துபாயிலிருந்து கொச்சிக்கான விமான
டிக்கெட் 489 திர்ஹம் ஆகும்.

ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலை துபாயிலிருந்து சென்னைக்கு 6184 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here