அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக நடந்துள்ள துரதிஷ்டவசமான சம்பவம்!

0

அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களுக்குமான அவசரகால நிலை பிரகடனத்திற்கான அறிக்கையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை அமெரிக்க மாநிலங்கள் தவிர்ந்த ஐக்கிய அமெரிக்காவில் உள்ள தீவுகளிலும் இவ்வாறு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் அமெரிகாவில் உள்ள 50 மாநிலங்களுக்கும் அவசரகால நிலை பிரகடனப்படுத்துவது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும் அந்த ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

தற்போதைய சூழலில் இத்தாலியையும் விட அமெரிக்காவிலேயே கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாக காணப்படுகின்றது.

இந்நிலையிலேயே அமெரிக்க மாநிலங்கள் அனைத்திலும் இவ்வாறு அவசரகால நிலை பிரகடப்படுத்துவதற்கான அறிக்கையில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here