இத்தாலி சோகம் ஒரே நாளில் 793 பேர் உயிரிழப்பு.உலகில் பலி எண்ணிக்கை 12,773 ஆனது

0

கொரோனா எனும் கொவிட் – 19; நோயினால் உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12773 ஆக அதிகரித்துள்ளது.  இத்தாலியில் மேலும் 793 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று சனிக்கிழமை இரவு வெளியான தகவல்களின்படி,  உலகில் மொத்தமாக 297400 பேர் கொரேனா வைரஸ் தொற்றுக்குஆளாகியிருந்தனர்.

இவர்களில் 12773 பேர் உயிரிழந்துள்ளனர். 94584 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் ஒரே நாளில் 793 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 4825 ஆகஅதிகரித்துள்ளது.

இத்தாலியில் 56578 பேருக்கு கொரோனா வைரஸ்  தொற்று ஏற்பட்டுள்ளது இவர்களில் 6072 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

சீனாவில் 7 புதிய மரணங்களும் 41 புதிய தொற்றுகளும்  பதிவாகியுள்ளன. அந்நாட்டில் மொத்தமாக 81008  பேருக்குத் தொற்றுஏற்பட்டிருந்தது. இவர்களில் 71740 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, ஈரானில் கொரோனா வைரஸினால் மேலும்  123 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அங்குஉயிரிழந்தோர் எண்ணிக்கை 1556 ஆக  அதிகரித்துள்ளது. அங்கு இதுவரை 26610 பேருக்கு  கொரோனா வைரஸ் தொற்றுஏற்பட்டுள்ளது. இவர்களில்  7635 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஸ்பெய்னில் மேலும் 285 பேர் உயிரிழந்துள்ளனர் என. இன்று அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கு பலியானோர்  எண்ணிக்கை 1378 ஆகஅதிகரித்துள்ளது. ஸ்பெய்னில் 25374 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

தென் கொரியாவில் இதுவரை 94 பேர் உயிரிழந்துள்ளனர்.  அந்நாட்டில் 8652பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

பிரான்ஸில் கொரோனா வைரஸினால் 450 பேர்  உயிரிழந்துள்ளனர் அங்கு 12612 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

ஜேர்மனியில் 74 பேர் இறந்துள்ளனர். 21828 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 282 பேர் இறந்துள்ளனர். அங்கு 22132 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனில் 14180 பேர் இறந்துள்ளனர். 4094 பேருக்குத்  தொற்று ஏற்பட்டுள்ளது, நெதர்லாந்தில் 136 பேர்  இறந்துள்ளனர், அங்கு 3631 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது,

சுவிட்ஸர்லாந்தில் 72 பேர் இறந்துள்ளனர். அங்கு 6371  பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. பெல்ஜியத்தில் 67 பேர்  இறந்துள்ளனர். அங்கு 2815 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here