இந்தியர்களை அமீரகம் வர அனுமதி வழங்கியதற்கு நன்றி தெரிவித்த இந்திய தூதரகம்..!

0

இந்தியர்களை அமீரகம் வர அனுமதி வழங்கியதற்கு நன்றி தெரிவித்த இந்திய தூதரகம்..!

இந்தியாவில் கிருமித்தொற்று உச்ச நிலையில் காணப்பட்ட அதன் காரணமாக நீண்ட காலமாக அமீரகம் ஆனது இந்தியாவுடனான விமானப் பயணங்களை முழுமையாக தடை செய்திருந்தது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் விதிக்கப்பட்ட விமான தடையானது இந்திய கிருமித்தொற்று இரண்டாவது அலையினால் மிக மோசமாக பாதிப்பு அடைந்ததை தொடர்ந்து விமான தடை மேலும் நீடிக்கப்பட்டது.

இதனால் அமீரகத்தில் தொழில்புரியும் அநேக ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர்.

எனினும் தற்போது நாளை முதல் இந்தியா இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து ரெசிடென்சி விசா உள்ள பயணிகளுக்கு அமீரகம் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது அமீரக அரசின் வரவேற்கத்தக்க முடிவாகும் எனவும் இதனால் ரெசிடென்சி விசா வைத்திருக்கும் இந்தியர்கள் பயனடைவார்கள் என துபாயில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியர்களை அமீரகம் வர அனுமதி வழங்கியதற்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளது.

அமீரகம் தற்போது இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து வர பயணிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அவர்கள் நாளை (ஆகஸ்ட் 5ம் தேதி)முதல் அமீரகம் வர முடியும்.

ஆகஸ்ட் 5ம் தேதி முதல் சிலர்களுக்கு மாத்திரமே அமீரகம் வர அனுமதி வழங்கியுள்ளது.

அமீரகம் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளோர்…

*அமீரக சுகாதார துறையில் பணிபுரிபவர்கள்(வைத்தியர்கள்,தாதி..), *அமீரக கல்வி துறையில் பணிபுரிபவர்கள்(பல்கலைக்கழகம், கல்லூரி, நிறுவனங்கள்), *மாணவர்கள்,
*பெடரல் மற்றும் உள்ளூர் அரசுகளில் பணிபுரிவோர்
*மனிதாபிமான முறையில் அமீரகம் திரும்ப விரும்புவோர்.(செல்லுபடியாகும் விசா இருக்க வேண்டும்.)

நிபந்தனை

இவர்கள் அமீரகம் வர தடுப்பூசியின் இரண்டு டோஸையும் போட்டிருக்க வேண்டும் .மேலும் இரண்டாவது டோஸை பயணம் செய்யும் தேதிக்கு 14 நாட்களுக்கு முன்பு போட்டிருக்க வேண்டும்.

மேலும் செல்லுபடியாகும் ரெசிடன்சி விசாவினை வைத்திருக்க வேண்டும்.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நைஜீரியா, உகாண்டா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த குறித்த பயணிகளுக்கு அமீரகம் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here