இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு அமீரகம் வர அனுமதி…

0

கிருமித்தொற்று பரவலை அடுத்து நீண்ட காலமாக விமான பிரயாணங்கள் தடைப்பட்டுள்ளன.

அமீரகம் தற்போது இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து வர பயணிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அவர்கள் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் சிங்கப்பூர் வர முடியும்.

அமீரகமானது கிருமித்தொற்று அதிகமாக உள்ள நாடுகளுக்கான பயணங்களை தடை செய்துள்ளது.எனினும் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் சிலர்களுக்கு அமீரகம் வர அனுமதி வழங்கியுள்ளது.

அமீரகம் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளோர்…

*அமீரக சுகாதார துறையில் பணிபுரிபவர்கள்(வைத்தியர்கள்,தாதி..), *அமீரக கல்வி துறையில் பணிபுரிபவர்கள்(பல்கலைக்கழகம், கல்லூரி, நிறுவனங்கள்), *மாணவர்கள்,
*பெடரல் மற்றும் உள்ளூர் அரசுகளில் பணிபுரிவோர்
*மனிதாபிமான முறையில் அமீரகம் திரும்ப விரும்புவோர்.(செல்லுபடியாகும் விசா இருக்க வேண்டும்.)

இவர்கள் சிங்கப்பூர் வர தடுப்பூசியின் இரண்டு டோஸையும் போட்டிருக்க வேண்டும் .மேலும் இரண்டாவது டோஸை பயணம் செய்யும் தேதிக்கு 14 நாட்களுக்கு முன்பு போட்டிருக்க வேண்டும்.

மேலும் செல்லுபடியாகும் ரெசிடன்சி விசாவினை வைத்திருக்க வேண்டும்.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நைஜீரியா, உகாண்டா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த குறித்த பயணிகளுக்கு அமீரகம் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here