இந்தியா-சிங்கபூர் இடையே முக்கிய நகரங்களில் இருந்து தினசரி 6 விமானங்கள்..!

0

இந்தியா-சிங்கபூர் இடையே முக்கிய நகரங்களில் இருந்து தினசரி 6 விமானங்கள்..!

VTL திட்டம் என்றால் என்ன?

நோய்த்தொற்று காரணமாக சர்வதேச அளவில் பல நாடுகளுடன் விமான பயணத் தடை நீண்ட காலமாக நிலவியது.

இதனால் அதிகளவு பயணிகள் பல இண்ணல்களை சந்திக்க நேரிட்டதுடன் மக்களின் வாழ்க்கை தரம் மோசமாக பாதிப்புக்குள்ளானது.

எனினும் சிங்கப்பூர் மற்றும் உலகளாவிய தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் துரிதமாக இடம்பெற்றதுடன் உலகவில் அதிக சதவீதமானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இதனால் சிங்கப்பூர் தடுப்பூசி போட்டுக் கொண்டு பயணிகளை சிங்கப்பூர் அழைத்து வருவதற்கு விசேட பயணத்திட்டதை அறிமுகம் செய்தது. அதுவே VTL திட்டம் ஆகும்.

இத் திட்டத்தின் கீழ் வருகை தரும் பயணிகள் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

இவர்கள் தனிமைப்படுத்தல் இன்றி சிங்கப்பூர் நுழைய முடியும்.

இந்தியாவுடன் VTL திட்ட விமான சேவை ஆரம்பம்

இத் திட்டத்தின் கீழ் விமானங்களை தினசரி சிங்கப்பூர்-இந்தியா இடையே 29ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது.

இது குறித்த பேச்சுவாரத்தைகளை சிங்கப்பூர் இந்தியாவுடன் மேற்கொண்டது.

இத் திட்டத்தின் மூலம் திட்டமிட்ட வணிக ரீதியான பயணிகள் விமானம் மாத்திரமே நியமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-சிங்கபூர் இடையே தினசரி 6 விமானங்கள்

சிங்கப்பூர் – இந்தியா இடையிலான VTL சிறப்பு பயணம் மூலம் இந்தியாவின் முக்கிய மூன்று நகரங்களிலிருந்து தினசரி ஆறு விமானங்கள் இயங்வுள்ளது.

அதாவது சென்னை, டெல்லி மற்றும் மும்பை ஆகிய முக்கிய மூன்று நகரங்களிலிருந்து அந்த சேவை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இத் திட்டம் ஆரம்பிப்பதால் போதியளவு விமான சேவை இல்லாமல் நெருக்கடிக்குள்ளான பயணிகள் விரைவாக சிங்கப்பூர் செல்லமுடியும்.

செல்லுபடியாகும் விசாக்கள் மற்றும் முறையான நுழைவு ஒப்புதல்களுடன் தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்திய பயணிகள் தனிமைப்படுத்தல் இல்லாமல் சிங்கப்பூர் பயணிக்க முடியும்.

இதற்கான விண்ணப்பங்கள் நவம்பர் 22 மாலை 6 மணி முதல் வழங்கப்படவுள்ளது.

இவர்கள் நவம்பர் 29 ஆம் தேதி முதல் தனிமைப்படுத்தல் இன்றி சிங்கப்பூர் நுழைய முடியும்.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here