இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியான பெண் – பிறந்த குழந்தை மரணம்..!

0

இலங்கையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியான பெண் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

குறித்த பெண் கொழும்பு மருதானை பகுதியை சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது.

டீ சொய்சா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு பிறந்த குழந்தை இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 416 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 109 பேர் பூரண சுகமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 24 மணி நேரத்தில் 48 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here