ஊழியர்களின் மனநலத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டுள்ளது.

0

ஊழியர்களின் மனநலத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் அண்மைக்காலமாக நோய்த்தொற்று சூழலினால் மனநிலை பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை வெளிநாட்டு ஊழியர்களுக்காக நடமாட தடை மற்றும் விமான தடை காரணமாக தாயகம் திரும்ப முடியாத சூழல் நிலவுகிறது.

இதனால் தனிமை காரணமாக கடுமையான மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மை போன்றவற்றை அதிகமானோர் எதிர்கொண்டுள்ளனர்.

இதன் பாதிப்பு சிலர் தற்கொலை செய்யும் எண்ணம் ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனால் ஊழியர்களுக்கு மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதை விடவும் மனநலத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.

ஊழியர்களின் தற்போதைய தேவையாக வெளியே சிங்கப்பூரர்களை போன்று வெளியே சுதந்திரமாக நடமாட வேண்டும். பொழுதுபோக்கு மையங்களுக்கு செல்ல வேண்டும்.

மேலும் பெரும்பாலான ஊழியர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு எப்போது செல்வோம் என்ற ஏக்கத்தில் தற்போது வரை உள்ளனர்.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here