கண்டுபிடிக்கப்பட்டது கொரோனாவின் “வீக் பொய்ண்ட்” – அமெரிக்க ஆய்வாளர்கள் தகவல்!

0

கொரோனா வைரஸின் உடலில், மருந்துகளால் எளிதில் தாக்கப்படுவதற்கேற்ற ஒரு பகுதியை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இது கொரோனா வைரஸின் “வீக் பொய்ண்ட்” என அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

SARS நோயால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவரின் உடலை ஆராய்ந்த அறிவியலாளர்கள், அவரது உடல் SARS நோய்க்கு எதிராக உருவாக்கியிருந்த ஒரு ஆன்டிபாடியை ட்ராக் செய்தபோது, அது SARS வைரஸின் ஒரு குறிப்பிட்ட பகுதி வழியாக உள்நுழைவதைக் கண்டறிந்தனர்.

அதேபோல் அந்த ஆன்டிபாடி கொரோனா வைரஸ் உடலில் எந்த பகுதியில் சென்று இருக்கின்றது என்பதையும் அந்த அறிவியலாளர்கள் கண்டறிந்தார்கள்.

இதேபோல் அந்த ஆன்டிபாடியை கொரோனா வைரஸ் மீதும் செலுத்திப்பார்த்துள்ளனர்.

அப்போது அது கொரோனா வைரஸ் மீது அமராவிட்டாலும், கொரோனா வைரஸின் உடலில் எந்தப் பகுதி வலிமையற்றதாக இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க அது உதவியது.

இந்த கண்டுபிடிப்பு, கொரோனா வைரஸின் உடலில் எந்த பகுதியை மருந்துகள் கொண்டு தாக்கலாம் என்பதை அறிய உதவியுள்ளது.

அந்த பகுதிதான் கொரோனா வைரஸின் ’வீக் பொய்ண்ட்’ என்று கூறலாம் என்கிறார் Dr Ian Wilson என்ற ஆய்வாளர்.

இந்த கண்டுபிடிப்பு, கொரோனா வைரஸின் உடல் அமைப்பைக் கண்டுபிடிக்கவும் உதவியுள்ளதால், அதன் மூலம், கொரோனாவுக்கான தடுப்பூசியை வடிவமைக்கவும் அது உதவும் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here