கத்தாரில் ஏனைய வேலையிடங்கள் தொடர்பான வேலை நேரம் பற்றிய அறிவிப்பு..!

0

கத்தாரில் வணிக மற்றும் சேவை நடவடிக்கைகளுக்கான வேலை நேரம் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இருக்கும் என்று வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம் (MoCI) நேற்று சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

COVID-19 பரவலைக் கட்டுப்படுத்த இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இருப்பினும், உணவு நடவடிக்கைகள், ஹைப்பர் மார்க்கெட்டுகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்கும் கடைகள், பெட்ரோலிய நிலையங்கள் மற்றும் கார் சேவைகள், பராமரிப்பு நிறுவனங்கள் (மின்சாரம், பிளம்பிங் மற்றும் மின்னணு சேவைகள்), ஆன்லைனில் ஆடர் செய்யும் நிறுவனங்கள்,மருந்தகங்கள்,பேக்கரிகள் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் இந்த முடிவிலிருந்து விலக்கப்பட்டுள்ளன.

உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் கஃபேக்கள் (காபி கடைகள்) வணிக இடத்திற்கு வெளியே வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர்களை வழங்க அனுமதிக்கப்படுகின்றன.

இருப்பினும், மால்களில் அமைந்துள்ள உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் இந்த முடிவிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன, மேலும் அவை விநியோக ஆர்டர்களைச் செயல்படுத்த மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கடைகள் மற்றும் அலுவலகங்களில் அனைத்து வணிக நடவடிக்கைகளும் நிறுத்தப்படுகிறன.

முன்னர் குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகள் இந்த முடிவிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Source: The Peninsula Qatar

Leave a reply

Please enter your comment!
Please enter your name here