கத்தாரில் COVID-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 3-4 வீதம் குழந்தைகள் ஆகும்..!

0

ஏப்ரல் மாத தொடக்கத்தில் குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க COVID-19 வசதி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து ஹமாத் மருத்துவக் கழகத்தின் (HMC) அல் சாத் குழந்தை அவசர சிகிச்சை மையம் (PEC) வைரஸினால் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு உயர்தர பராமரிப்பை வழங்கியுள்ளது.

கத்தார் மற்றும் உலகெங்கிலும் நாம் பார்த்தது யாதெனில், எல்லா வயதினரும் COVID-19 ஆல் பாதிக்கப்படலாம், ஆனால் இன்றுவரை உள்ள சான்றுகள் மிகக் குறைவான குழந்தைகள் தொற்றுநோயால் கடுமையான அறிகுறிகளை அனுபவிக்கின்றன என்பதைக் காட்டுகிறது.

“இது ஊக்கமளிக்கும் அதே வேளையில், குழந்தைகள் வைரஸிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் என்று அர்த்தமல்ல, கடுமையான COVID-19 அறிகுறிகளின் விளைவாக பல குழந்தைகள் அல் சாத் PEC-யில் அனுமதிக்கப்படுவதை நாங்கள் காண்கிறோம்” என்று குழந்தை மருத்துவத்தின் செயல் தலைவரும் குழந்தைகள் அவசர மையங்களின் இயக்குநருமான டாக்டர் முகமது அல் அம்ரி கூறினார்.

COVID-19 ஆல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறந்த மருத்துவ சேவைகளை PEC வழங்குகிறது.

கத்தாரில் COVID-19 தொற்று உள்ளவர்களில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் 25 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் என்று நோயாளிகள் தொடர்பான தரவுகள் கூறுகிறன.

ஆனால் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மூன்று முதல் நான்கு சதவிகிதம் வரை தொற்று உறுதிப்படுத்த பட்டவர்களாக விளங்குகிறனர்.

Source & Image Credit:The Peninsula Qatar

Leave a reply

Please enter your comment!
Please enter your name here