கத்தார் ஏர்வேய்ஸ் 40ற்கு மேற்பட்ட இடங்களுக்கு தனது பயணத்தை தொடங்குகிறது..!

0

கத்தார் ஏர்வேஸ் படிப்படியாக அதன் வலையமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவது பாங்காக், பார்சிலோனா, இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர், பெஷாவர், சிங்கப்பூர் மற்றும் வியன்னா ஆகிய இடங்களுக்கு இந்த வாரம் விமானங்கள் மீண்டும் தொடங்குகிறது.

விமான நிறுவனமானது 40 க்கும் மேற்பட்ட இடங்களுக்கு தனது பயணிகளை அழைத்து செல்லும் நடவடிக்கைகளை தொடங்குகிறது.

பெர்லின், தாருஸ் சலாம், நியூயார்க், துனிஸ் மற்றும் வெனிஸ் ஆகிய இடங்களுக்கான விமானங்களை மீண்டும் தொடங்குவதாகவும் விமான நிறுவனம் அறிவித்தது.

விமான பயணத்தின் தேதி மாற்றங்களை மேற்கோள்ள முடியும் என்றும் பயணிகள் புறப்படும் இடத்திலிருந்து தரையிறங்கும் இடமானது 5,000 மைல்களுக்குள் இருந்தால் அவர்களுக்குத் தேவையான நேரத்தில் மாற்றலாம் என கூறப்படுகிறது.

2020 டிசம்பர் 31 வரை பயணத்திற்காக முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து டிக்கெட்டுகளும் வழங்கப்பட்ட தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here