குறைவான ஊதியம் வழங்கிய முதலாளிமார் மீது நடவடிக்கை. ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கூடுதல் அவதானத்துடன்

0

வெளிநாட்டவர்கள் வேலைக்காக செல்ல ஆசியாவில் சிறந்த இடம் சிங்கப்பூர் ஆகும். மேலும் கடந்த 5 ஆண்டுகளாக சட்ட ஒழுங்கு நடவடிக்கை ரீதியில் சிங்கப்பூரே முதலிடம் வகிக்கிறது.ஊழியர்கள் சம்மந்தப்பட்ட விடயங்களில் கூடுதல் அவதானத்துடன் சிங்கப்பூர் இருந்து வருகிறது.

சிங்கப்பூரில் 2015க்கும் 2019க்கும் இடைப்பட்ட காலத்தில் வருடத்திற்கு சுமார் 190 முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் ஜோசஃபின் தியோ தெரிவித்துள்ளார். இவர்கள் தமது ஊழியர்களுக்கு குறைவாக சம்பளம் கொடுத்த காரணத்தினாலே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கு முன் 2010க்கும் 2014க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆண்டுக்குச் சுமார் 60 முதலாளிகள் மீது தமது அமைச்சு நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவித்தார்.

இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்ட முதலாளிமார்களின் எண்ணிக்கை சுமார் மூன்று மடங்கு அதிகரித்து காணப்படுகிறது. இவ்வாறு எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணம் ஏன் என்பதை மனிதவள அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அத்தகைய முதலாளிகளை அடையாளம் காண அதன் ஆற்றலை மேம்படுத்தியதுடன் வெளிநாட்டு ஊழியர்களிடையே சம்பளப் பிரச்சினைகள் பற்றிப் புகார் செய்வது குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கப்பட்டது.

சில சமயங்களில் முதலாளிகள் முழு சம்பளத்தை ஊழியர்களின் கணக்கில் போட்டுவிட்டு அவர்களிடமிருந்து பின்னர் பணத்தை மீண்டும் பெற்றுக்கொள்வதாகவும் புகார்கள் வந்துள்ளதாகவும் கூறினார். இதனால்
அமைச்சு தொடர்ந்து முதலாளிகளைக் கவனித்து வருவதாகவும் தவறு செய்யும் முதலாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருமதி தியோ கூறியுள்ளார். 

Leave a reply

Please enter your comment!
Please enter your name here