கொரோனாவுக்கு எதிராக உலக நாடுகளை விட வெற்றிகரமாக திகழும் இலங்கை !

0

வல்லரசு நாடுகள் கொரோனா வைரஸிற்கு எதிராக முகங்கொடுக்க முடியாமல் திணறி வருகின்றன.எனினும் இலங்கை பாரிய வெற்றிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்ததும் போது இலங்கை இராணுவத்தினர் தலைமையிலான முப்படையினரால் 100 வீத வெற்றிகரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட எந்தவொரு நபராலும் இன்னும் ஒருவருக்கு வைரஸ் தொற்ற இடமாளிக்காமல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் செயற்பாடு என்பது இலங்கை இராணுவத்தினர் தங்கள் வாழ் நாளில் முதல் முறையாக கற்ற விடயமாகும் எனினும் முடியாத விடயங்கள் என்று ஒன்றும் இல்லை என நிரூபித்து இந்த செயற்பாடுகளை இராணுவத்தினர் வெற்றிகரமாக மேற்கொண்டனர்.

அதற்கமைய சுகாதார அதிகாரிகளினால் மக்களுக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைய செயற்பட்டால் எந்த ஒரு நபருக்கும் கொரோனா தொற்றாமல் பார்த்துக் கொள்ள முடியும்.இது இலங்கைக்கு 5வது வாரமாகும்.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை வெற்றிகரமான இடத்தில் உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here