கொரோனா தொற்றால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர் சற்று முன் தீவிர சிகிச்சை பிரிவில்

0

கொரோனா வைரஸ் தொற்றால் பிரதமர் போரிஸ் ஜான்சன் நிலைமை மோசமாகிவிட்டதால் தீவிர சிகிச்சைக்கு மாற்றப் பட்டுள்ளார் என வைத்தியசாலைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 11 நாட்களாக சுய தனிமைக்குட்படுத்திக்கொண்ட 55 வயது நிரம்பிய பிரித்தானிய பிரதமர் நேற்று மாலை | அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் . கொரோனா அறிகுறிகள் சற்றேனும் குறையாமல் இருந்தமையாலும் திடீரென உடல் வெப்பநிலை கூடுதலாக இருந்தமையாலும் அவரது மருத்துவர் அவரை உடனே வைத்தியசாலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியமையை அடுத்து அவர் வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக பிரித்தானிய செய்திகள் தெரிவிக்கின்றன .

Leave a reply

Please enter your comment!
Please enter your name here