கொரோனா: மலேசியாவில் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு

0

புத்­ரா­ஜெயா: மலே­சி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்று அதி­க­மாக இருக்­கிறது என்­றா­லும் அத­னால் ஏற்­ப­டக்­கூ­டிய மரண விகி­தம் இதர பல நாடு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் குறை­வா­கவே உள்­ளது.

இது மட்­டு­மின்றி, கொரோனா கிரு­மித்­தொற்­று காரணமாக தீவிர கண்­கா­ணிப்­புப் பிரி­வில் சிகிச்சை பெற்று வரு­வோ­ரில் ஏறக்­கு­றைய பாதி பேர் குண­ம­டைந்­து­விட்­டார்­கள் என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்து உள்­ள­னர். 

கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக ஏற்­ப­டக்­கூ­டிய மரண விகி­தம் இதர பல நாடு­க­ளி­ல் 4% முதல் 5% வரை உள்­ளது. 

ஆனால் மலே­சி­யா­வில் இந்த விகி­தாச்­சா­ரம் 1.58 விழுக்­கா­டாக இருக்­கிறது என்று சுகா­தார அமைச்­சின் தலைமை இயக்­கு­நர் நூர் ஹிசாம் அப்­துல்லா தெரி­வித்­தார். 

நாட்­டில் கொரோனா கிரு­மித்­தொற்றால் ஏற்படும் மர­ணங்­களைக் குறை­க்க அமைச்­சின் மருத்­து­வர்­களும் சிறப்பு வல்­லு­நர்­களும் அரும்­பா­டு­பட்டு வரு­கி­றார்­கள் என்று அவர் தெரி­வித்­தார்.

“நில­வ­ரங்­களை வைத்து பார்க்­கை­யில், மலே­சி­யா­வில் வார்­டு­களி­லும் தீவிர சிகிச்சைப் பிரி­வு­க­ளி­லும் வழங்­கப்­படும் மருத்­து­வச் சேவை தலை­சி­றந்த நிலை­யில் இருக்­கிறது. மன­நி­றைவு தருமள­வில் உள்ளது.

“நோயா­ளி­க­ளுக்கு நம்­மு­டைய சிறப்பு வல்­லு­நர்­களும் தீவிர கண்­கா­ணிப்­புப் பிரிவு மருத்­து­வர்­களும் தலை­சி­றந்த சிகிச்சை அளித்து வரு­கி­றார்­கள்,” என்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அவர் தெரி­வித்­தார். 

கொரோனா கிருமி தொற்­றி­யோரில் 5 விழுக்­காட்­டி­னர் தீவிர கண்­கா­ணிப்­புப் பிரி­வில் சேர்க்­கப்­பட்­ட­னர். அவர்­களில் ஏறக்­கு­றைய பாதி பேர் குண­ம­டைந்­து­விட்­ட­னர்.

மலே­சி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக 70 பேர் மாண்­டு­விட்­ட­னர். 4,346 பேர்  பாதிக்­கப்­பட்டு உள்­ள­னர்.

தீவிர  சிகிச்­சைப் பிரி­வில்  இப்­போது 72 பேர் இருக்­கி­றார்­கள். அவர்­களில் 43 பேருக்குச் செயற்கை சுவா­சம் கொடுக்­கப்­ப­டு­கிறது.

இது­வ­ரை­யில் 1,830 பேர் குண­மடைந்து இருக்­கி­றார்­கள். இந்த விகி­தம் கொரோனா தொற்று கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்­கை­யு­டன் ஒப்­பி­டு­கை­யில் 38 விழுக்­கா­டாக உள்­ளது. 

இத­னி­டையே, மருத்­துவ கையுறை­க­ளைத் தயா­ரிக்­கும் உல­கின் ஆகப் பெரிய நிறு­வ­ன­மான கிளவ் கார்ப்­ப­ரே­ஷன் பெர்­ஹாட் நிறு­வ­னம் முகக்­க­வ­சங்­களைத் தயா­ரிக்­க உள்ளதாகக் கூறப்படுகிறது.  

கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக முகக்­க­வ­சங்­க­ளுக்கு அதிக தேவை ஏற்­பட்டு இருக்­கிறது. இந்த நிலை­யில் இந்த நிறு­வ­னம் இவ்­வாறு திட்­ட­மி­டு­வ­தாக அதன் உயர்­நிலை அதி­காரி ஒரு­வர் கூறி­னார் என்று ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னம் தெரி­வித்து உள்­ளது.

உல­க­ள­வில் புழங்­கும் ஐந்து கையு­றை­களில் ஒன்றை இந்த நிறு­வ­னம் தயா­ரிக்­கிறது. ஆண்டு ஒன்­றுக்கு 110 மில்­லி­யன் கையுறை­க­ளைத் தயா­ரிக்­கும் வச­தியை  இன்­னும் இரண்டு மாத காலத்­தில் இந்த நிறு­வ­னம் பெற்­றி­ருக்­கும்

Leave a reply

Please enter your comment!
Please enter your name here