கொரோனா வைரஸ் தொற்று.. ஐரோப்பாவின் தற்போதைய நிலவரம் என்ன?

0

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மிகவும்  மோசமான வகையில் பாதிக்கப்பட்ட பிராந்தியமாக  ஐரோப்பா காணப்படுவதுடன், இந்த பாதிப்பை  கட்டுப்படுத்த அந்த பிராந்தியம் திணறி வருவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தாலி

இத்தாலியில் ஒரே தினத்தில் அதிகளவானோர்  உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் 793 பேர் அங்கு  உயிரிழந்துள்ளனர். இதுவரைஇத்தாலியில் 4 ஆயிரத்து  825 பேர் உயிரிழந்துள்ளனர். தினமும் அடையாளம்  காணப்படும் கொரோனா தொற்றிவர்களின்  எண்ணிக்கைஅங்கு 29 வீதமாக அதிகரித்துள்ளது . 53  ஆயிரத்து 578 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு  உள்ளாகி உள்ளனர்.

பிரித்தானியா 

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின்  எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது என  அந்நாட்டின் சுகாதாரமற்றும் சமூக பாதுகாப்பு  திணைக்களம் தெரிவித்துள்ளது .

கடந்த 24 மணி நேரத்தில் பிரித்தானியாவில் கொரோனா  தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை  ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ்  காரணமாக பிரித்தானியாவில் 233 பேர்  உயிரிழந்துள்ளனர். பிரித்தானியாவில் 72 ஆயிரத்து 818  பேருருக்குகொரோனா பரிசோதனை  நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள்  தெரிவிக்கின்றன.

ஸ்பெயின்

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள  மற்றுமொரு ஐரோப்பிய நாடான ஸ்பெயின் இத்தாலிக்கு  அடுத்த நிலையில்இருப்பதை காணக் கூடியதாக உள்ளது.  ஸ்பெயினில் 19 ஆயிரத்து 980 பேர் கொரோனா  தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் ஆயிரத்து 2 பேர்  உயிரிழந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக  நாட்டுக்கு மக்களுக்கு உரையாற்றியுள்ள அந்நாட்டு  பிரதமர் , அடுத்த சில தினங்கள்மிகவும் மோசமாக  இருக்கக் கூடும் எனக் கூறியுள்ளார். இதனால், அதனை  எதிர்கொள்ள உடல் மற்றும் மன ரீதியாக தயாராக  இருக்கவேண்டும் என அவர் மக்களை  கேட்டுக்கொண்டுள்ளார். அனைத்து இடங்களில்  அச்சுறுத்தல் காணப்படுகிறது எனவும்  அவர்சுட்டிக்காடியுள்ளார்.

ஜேர்மனி 

ஜேர்மனியின் பேர்லின் நகரில் தொடர்ந்தும் கொரோனா  வைரஸ் பரவி வருவதன் காரணமாக கடும் கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டுள்ளன. ஒரு நாளுக்கு 10 பேர் மட்டுமே கூட  வேண்டும் எனவும் அதுவும் சுகாதார பாதுகாப்புடன்  இருக்க வேண்டும் எனவும்அறிவிக்கப்பட்டுள்ளது.

பேர்லின் நகரில் உள்ள கடைகளில் விநியோக சேவைகள்  மற்றும் வெளியில் எடுத்துச் செல்வதற்கு மாத்திரம்  வரையறுக்கப்பட்டுள்ளன. கடைகளில் இருப்பது  கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது. 

பிரான்ஸ் 

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல்  அதிகரித்துள்ளதுடன் தினமும் உயிரிழப்போரின்  எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின்  சுகாதார அமைச்சு தெரிவித்துள்ள வகையில் நேற்று  அந்நாட்டில் 562 பேர் உயிரிழந்துள்ளனர்.  வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது உயிரிழந்தோரின்  எண்ணிக்கை 450 அதிகமாகும். கடந்த வெள்ளிக் கிழமை  பிரான்ஸ் நாட்டில் 112 பேர்கொரோனா வைரஸ்  காரணமாக உயிரிழந்தனர்.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here