கோலாலம்பூரிலிருந்து ஜொகூருக்கு பேருந்தில் பயணம் செய்த 25 பேர் கைது

0

சிரம்பான்,ஏப் 15 – கட்டுப்படுத்தப்பட்ட நடமாட்ட உத்தரவை மீறி பேருந்து ஓட்டுனர் உட்பட அப்பேருந்தில் பயணம் செய்த 25 பேரும் சிரம்பான்,ஜாலான் யம் துவான் அருகே போலீசாரால் மடக்கி பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

முதல் கட்ட விசாரணையில் 3 உள்நாட்டவர்களும் 22 இந்தோனேசிய பிரஜைகளும் கோலாலம்பூரிலிருந்து ஜொகூர் பாருவுக்கு பேருந்தில் சென்றதாக தெரிய வந்துள்ளது என சிரம்பான் மாவட்ட போலீஸ் அதிகாரி முகமட் சைட் இப்ராகிம் தெரிவித்தார். அவர்களில் 5 இந்தோனேசிய பெண்களும் அடங்குவர்.

19 முதல் 66 வயதிற்கு உட்பட்ட அந்த 25 பேரும் விசாரணைக்காக சிரம்பான் போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here