சம்பளம் வழங்காமல் நியாயமின்றி தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யும் தனியார் நிறுவனங்கள் பற்றி அரசு கவனம் செலுத்த வேண்டும்

0

சம்பளம் வழங்காமல் நியாயமின்றி தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யும் தனியார் நிறுவனங்கள் பற்றி அரசு கவனம் செலுத்த வேண்டும்

மலேசியாவை கிருமித்தொற்று மிக மோசமாக பாதிக்கினறது.

மலேசியா அரசு கிருமித்தொற்றை கட்டுக்குள் வைத்திருக்க பல கட்டுப்பாடுகளை விதித்தாலும் கிருமித்தொற்று பரவலில் வீழ்ச்சி ஏதும் இல்லை.

கிருமித்தொற்றை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக சிலர் தமது வேலையை இழந்து பொருளாதார நெருக்கடியை முகங் கொடுத்துள்ளனர்.

இவ்வாறான நெருக்கடியான காலப்பகுதியில் மலேசிய அரசு தொழிலாளிகளின் சமூக நலன் விவகாரங்களில் மலேசிய அரசு கவணம் செலுத்த வேண்டும். என MTUC எனும் மலேசிய தொழிற்சங்க காங்கிரஸின் தலைமை செயலாளர் கமாருல் பஹ்ரைன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சம்பளம் வழங்காமல் நியாயமற்ற முறையிலும் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யும் சில தனியார் நிறுவனங்கள் பற்றிய போக்கை
மலேசிய தொழிலாளர் காங்கிரஸ் அறிந்ததையடுத்து கமாருல் பஹ்ரைன் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் நிறுவனங்கள் ஏற்படுத்து தமது கொள்கைகள் மற்றும் நடைமுறைகளில் எவ்வித மாற்றங்தளை மேற்கொள்ளும் போதும் அதனால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் தாக்கத்தை மலேசிய அரசு அனுதாபத்தோடு கண்கானிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மலேசியா கிருமித்தொற்று நிலவரம்

வெளிநாட்டில் பணிபுரியும் தமிழக ஊழியர்களின் நலன்கருதி விசேட திட்டம்

தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் தமது ஊதியத்திற்காக வெளிநாடுகளுக்கு சென்று தொழில் புரிகின்றனர்.

இவ்வாறு தமிழகத்தைச் சேர்ந்த அதிகளவானவர்கள் சிங்கப்பூர்,மலேசியா, கத்தார், துபாய்,சவூதி அரேபியா போன்ற பல்வேறு நாடுகளில் தொழில் புரிகின்றனர்.

இவ்வாறு தொழிலுக்காக வெளிநாட்டுக்கு செல்லும் தமிழகத்தைச் சேர்நதவர்களின் நலன் கருதி அவர்களுக்காக “தமிழக அரசு வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை” என்று ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்கியுள்ளது.

இவ் அமைச்சகதின் அமைச்சராக் செஞ்சி மஸ்தான் செயற்படுகின்றார்.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் எதிர் கொள்ளும் முக்கியமான பிரச்சனைகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் ஆனது நடைபெற்றது.

இது தமிழக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமை தாங்கினார்.மேலும் வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையரக இயக்குனர் ஜெசிந்தா லாசரஸ் (IAS)மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

இதன் போது வெளிநாட்டுக்கு செல்லும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் நலன் கருதி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

*வெளிநாடுகளில் தொழில் புரிந்து நாடு திரும்பி ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு புதிய தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம்.

*மேலும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாதம் தோறும் ரூபாய் 5000 உதவித்தொகை வழங்கவும் ஆலோசித்து வருவதாக அமைச்சர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கபடுகிறது.

இத் திட்டமானது வெளிநாட்டில் தொழில் புரிகின்றவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியா கிருமித்தொற்று நிலவரம்

சிங்கப்பூர் கிருமித்தொற்று நிலவரம்

மலேசியா கிருமித்தொற்று நிலவரம்

Leave a reply

Please enter your comment!
Please enter your name here