சவூதியில் புதிதாக 493 கொரோனா வைரஸ் நோயாளிகள்! எண்ணிக்கை 5862 ஆக உயர்வு!

0

அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் (15.04.2020) பதிதாக 493 பேருக்கு புதியதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 5862 ஆக உயர்ந்துள்ளதாக சவுதியின் சுகாதார அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இதுவரை சவூதியில் 79 பேர் கொரோனா காரணமாக மரணித்துள்ளதோடு 931பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அடையாளம் காணப்பட்டவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவதாகவும், இதுவரை 100000க்கும் அதிகமானவர்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சவுதி அரேபிய செய்திகள் குறிப்பிடுகின்றன.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here