சிங்கப்பூர்-இந்தியா இடையிலான தொடர் விமான சேவை விரைவில்..!

0

நோய்த்தொற்று தொடங்கியது முதல் ஒன்றரை வருடங்களாக நீடித்த விமான பயணத் தடை காரணமாக பல இந்திய பயணிகள் இண்ணல்களை சந்தித்துவருகின்றனர்.

எனினும் தற்போது விமான பயண தடைக்கு தளர்வு வழங்கப்பட்டாலும் அதிகளவு பயணிகள் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கும் இந்தியாவில் இருந்து சிங்கப்பூரிற்கும் பயணிக்க ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

எனினும் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே தற்போது வந்தே பாரத் திட்டத்தின் மூலம் மட்டுமே குறிப்பிட்ட அளவிலான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டிற்கும் சிங்கப்பூருக்கும் இடையே விமானப் போக்குவரத்து எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது அதுமட்டுமல்லாமல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மட்டுமே குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன .

இதனால் பயணிகள் விமான டிக்கெட்களை பெற்றுக் கொள்ள அதிக காலம் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகின்றது. இதனால் பயணிகள்

மேலும் வருகை தரக் கூடியவர்கள் மற்றும் செல்லக்கூடியவர்கள் விரும்பினால் கூட உடனடியாக மற்றும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நேரங்களுக்கு செல்ல முடிவதில்லை இதற்கான காரணமாக கூறப்படுவது குறைந்த அளவிலான விமான போக்குவரத்து.

சிங்கப்பூர் இந்தியா இடையே தொடர் விமான போக்குவரத்து மற்றும் தற்காலிக விமான ஒப்பந்தம் இந்தியா செய்து கொள்ளவில்லை என கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.ஜெய்சங்கர் அவர்கள் மற்றும் சிங்கப்பூர் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஈஸ்வரன் அவர்கள் ஆகியோர் சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் சிங்கப்பூர் மற்றும் இந்தியா இடையே அதிக விமான போக்குவரத்து துவங்குவது பற்றி விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விரைவில் தொடர் விமான போக்குவரத்து துவங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here