சிங்கப்பூர்-சென்னை இடையே தினசரி விமான சேவை..!

0

சிங்கப்பூர்-இந்தியா ஆகிய இரு நாடுகளும் திட்டமிடப்பட்ட வணிக பயணிகள் விமான சேவைக்கு கடந்த பல மாதங்களாக தடை நிலவிவந்துள்ளது.

எனினும் தற்போது சிங்கப்பூர்-இந்தியா ஆகிய இரு நாடுகளும் திட்டமிடப்பட்ட வணிக பயணிகள் சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து தற்போது விவாதித்து வருவதாக போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் தெரிவித்தார்.

கோவிட்-19 அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தின் போது இதனை அவர் தெரிவித்தார்.

தினசரி சென்னை, டெல்லி மற்றும் மும்பையில் இருந்து சிங்கப்பூருக்கு தலா இரண்டு VTL விமானங்களை மீண்டும் இயக்குவதை இலக்காக கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

இத் திட்டத்தினை நவம்பர் மாதம் 29ஆம் தேதிக்குள் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கான பயணப்பாதை திட்டம் (VTL)

தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கான பயணப்பாதை திட்டம் (VTL) மூலம் பல நாடுகளில் இருந்து பயணிகள் சிங்கப்பூர் வருகினறனர்.

தற்போது இவ் தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கான பயணப்பாதை திட்டம் இந்தியாவுடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதனால் இந்தியாவில் இருந்து தடுப்பூசி போட்டுக் கொண்ட பயணிகள் சிங்கப்பூர் வர அனுமதிக்கப்படுவர்.

இப் பயணப்பாதை திட்டம் மூலம் வருகை தரும் பயணிகள் தனிமைப்படுத்தல் இன்றி சிங்கப்பூர் நுழைவு அனுமதி வழங்கப்படும்.

நவம்பர் 29, முதல் இந்தியாவுடன் சிங்கப்பூர் VTL பயண ஏற்பாட்டை அறிமுகப்படுத்த இருப்பதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து வரும் குறுகிய கால வருகையாளர்கள் மற்றும் நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்களுக்கான VTL விண்ணப்பங்கள் நவம்பர் 22, முதல் தொடங்கும்.

இந்திய பயணிகள் மகிழ்ச்சியில்..

இவ் அனுமதி குறித்து இந்திய பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர், குறிப்பாக இந்திய ஊழியர்கள் மீண்டும் சிங்கப்பூரில் தங்கள் பணிகளை அமைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

கிட்டத்தட்ட 20 மாதங்களுக்கு பிறகு இருநாடுகளிடையே விமான சேவை மீண்டும் தொடங்க உள்ளது. இத் தடை காரணமாக குடும்ப உறவுகள், தொழில் மற்றும் கல்வி என பல்வேறு வகையில் இருநாட்டு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here