சிங்கப்பூர் வருவதற்கு இந்தியர்களுக்கு தடையினால் ஊழியர்கள் பெரும் நெருக்கடியில்

0

சிங்கப்பூர் கிருமித்தொற்று அதிகரித்து தொடர்ந்து கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த தொடங்கியது நாளுக்கு நாள் கட்டுப்பாடுகள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. வேறு புதிய விதிமுறைகள் நாளுக்கு நாள் அமுல்படுத்தவும் சுகாதாரத்துறை, மனிதவள அமைச்சகம் மற்றும் சிங்கப்பூர் அரசு என அறிக்கைகளை வெளியிட்டன.

இவ்வாறு சிங்கப்பூரில் கிருமித்தொற்று அதிகரித்த நிலையில் சிங்கப்பூர் நடமாட கட்டுப்பாடு மட்டும் வேலை இடங்களுக்கான அனுமதி என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் வெளிநாடுகளில் கிருமித்தொற்று அதிகரித்ததை அடுத்து கிருமித் தொற்று அதிகமாக உள்ள நாடுகளுக்கான எல்லைகளை முழுமையாக சிங்கப்பூர் அரசு மூடியது இதனால் வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் வருவதற்கு தடை ஏற்பட்டதுடன் சிங்கப்பூரர்கள் வெளிநாடு செல்வதற்கு தடங்கல் ஏற்பட்டது.

சிங்கப்பூரில் பணியாற்றுபவர்களில் வெளிநாட்டினர அதிக அளவு கொண்டது. கட்டுமானத் துறை கப்பல் துறை மற்றும் ஏனைய அனைத்து துறைகளின் வெளிநாட்டினரின் பங்களிப்பு அதிகமாக உள்ளது.சிங்கப்பூரில் பணியாற்றும் ஊழியர்களின் மூன்றில் ஒரு பங்கினர் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியா பங்களாதேஷ் இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்த அதிகளவு ஊழியர்கள் சிங்கப்பூரில் பணியாற்றுகின்றனர் மேலும் பணியாற்ற விரும்புகின்றனர்.

கடந்த காலங்களில் தெற்காசிய நாடுகளுக்கான பயணக் கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்ததினால் வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் வருவதற்கு அவை தடங்கலாக இருந்தது எனினும் தற்போது இந்தியா உட்பட தெற்காசியாவில் உள்ள இந்தியா உட்பட அனேக நாடுகளுக்கான எல்லைகள் முழுமையாக மூடப்பட்டள்ளது.

இதனால் சிங்கப்பூரின் கட்டுமான துறை உட்பட அனைத்து துறைகள் ஊழியர் பற்றாக்குறையால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது இப்பாதிப்பு நிறுவனங்களுக்கு மாத்திரமின்றி அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கும் பாதிப்பாக அமைந்துள்ளது.

வேலையாட்கள் பற்றாக்குறை காரணமாக நிறுவனங்கள் தம்மிடமுள்ள குறைந்த அளவு மனித வளத்தை பயன்படுத்தி அதிக அளவு வேலை வாங்குவதால் ஊழியர்கள் அதிக வேலையிட விபத்துக்குள்ளானமை பதிவாகியுள்ளது. இது ஏனைய காலங்களை விட இக்காலத்தில் அதிகமாக உள்ளவையும் கவனிக்கத்தக்கது.

2020ஆம் ஆண்டில், சிங்கப்பூர் கட்டிடத் தளங்கள், கப்பல் தளங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை 16% சரிந்து 311,000ஆக உள்ளது என்று அரசாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் கட்டுமான துறை சார்ந்த நிறுவனங்கள் அரசிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். ஊழியர் பற்றாக்குறை காரணமாக வேலையிட விபத்துக்கள் அதிகரிப்பதாகவும் ஊழியர்கள் அதிகம் வேலைக்கு உட்படுத்தப்படுவதனாலும் கட்டுப்படுத்த முறையில் உரிய பாதுகாப்பு அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை பெற்று தரும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here