சிங்கப்பூர்-ஹாங்காங் நாடுகளுக்கிடையேயான எல்லையைத் திறக்கு பரிசீலனை

0

தொற்று நோய் அச்சம் காரணமாக மிக நீண்ட காலமாக சர்வதேச பிரயாணங்கள் தடைப்பட்டிருந்தது.மேலும் விசேட விமான சேவைகள் மூலம் சிங்கப்பூர் வந்த வெளிநாட்டவர்கள் தமது நாடு திரும்பினர்.

தற்போது ஹாங்காங் எல்லையை பாதுகாப்பாக திறக்க சிங்கப்பூர் அரசு ஆய்வு செய்து வருகிறது. அங்கே நோய்த்தொற்று பரவலின் கட்டுப்பாடு மகிழ்ச்சி அளிப்பதாக போக்குவரத்து அமைச்சர் ஓங் யே குங் தெரிவித்துள்ளார்.

படிக்க:ஒரு தங்குமிடத்தில் தங்கியிருப்பது சிறையில் இருப்பது போன்றது”வெளிநாட்டு ஊழியர்களின் நிலை

இருநாட்டு எல்லைகளை பாதுகாப்பாக மீண்டும் திறக்க பரிசீலித்து வருவதாகவும், விரைவில் ஹாங்காங்கிற்கு பதிலளிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஹாங்காங்கின் வர்த்தக மற்றும் பொருளாதார மேம்பாட்டு செயலாளர் எட்வர்ட் யவ் சிங்கப்பூருடனான பயணக் குமிழி முறையை மீண்டும் தொடங்க இரண்டு நிபந்தனைகள் உள்ளன என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

படிக்க:புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஏன் கடுமையான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்?

அவற்றுள் புறப்படுவதற்கு முன்பும், வந்த பின்னரும் COVID-19 பரிசோதனை அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a reply

Please enter your comment!
Please enter your name here