தனிமைப்படுத்தல் இன்றி இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வர அனுமதி..!

0

இந்தியாவுடன் தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான பயணத் திட்டத்தின்கீழ் (VTL) சிங்கப்பூர் பயண ஏற்பாடை விரிவுபடுத்தியுள்ளது.

தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கான பயணப்பாதை திட்டம் (VTL)

தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கான பயணப்பாதை திட்டம் (VTL) மூலம் பல நாடுகளில் இருந்து பயணிகள் சிங்கப்பூர் வருகினறனர்.

இப் பயணப் பாதை திட்டம் பல நாடுகளுக்கு அண்மை காலமாக விரிவுபடுத்தப்பட்டு வந்து அதிகளவு பயணிகள் சிங்கப்பூர் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இப் பயணப்பாதை திட்டம் மூலம் வருகை தரும் பயணிகள் தனிமைப்படுத்தல் இன்றி சிங்கப்பூர் நுழைவு அனுமதி வழங்கப்படும்.

இந்தியா சிங்கப்பூர் இடையே ஆரம்பமாகும் VTL பயணத்திட்டம்.

தற்போது இவ் தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கான பயணப்பாதை திட்டம் இந்தியாவுடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதனால் இந்தியாவில் இருந்து தடுப்பூசி போட்டுக் கொண்ட பயணிகள் சிங்கப்பூர் வர அனுமதிக்கப்படுவர்.

நவம்பர் 29, முதல் இந்தியாவுடன் சிங்கப்பூர் VTL பயண ஏற்பாட்டை அறிமுகப்படுத்த இருப்பதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து வரும் குறுகிய கால வருகையாளர்கள் மற்றும் நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்களுக்கான VTL விண்ணப்பங்கள் நவம்பர் 22, முதல் தொடங்கும்.

இந்திய பயணிகள் மகிழ்ச்சியில்..

இவ் அனுமதி குறித்து இந்திய பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர், குறிப்பாக இந்திய ஊழியர்கள் மீண்டும் சிங்கப்பூரில் தங்கள் பணிகளை அமைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

கிட்டத்தட்ட 20 மாதங்களுக்கு பிறகு இருநாடுகளிடையே விமான சேவை மீண்டும் தொடங்க உள்ளது. இத் தடை காரணமாக குடும்ப உறவுகள், தொழில் மற்றும் கல்வி என பல்வேறு வகையில் இருநாட்டு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்தியாவின் வந்தே பாரத் திட்டம் செயல்பட்டாலும், போதுமான விமானம் இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து நீடித்து வந்தது, இந்நிலையில் இந்த அறிவிப்பு இந்திய பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here