தற்போதைய சிங்கப்பூரின் நிலைமை குறித்து பிரதமர் லீ தெரிவித்த கருத்து..!

0

சிங்கப்பூரில் தினசரி நோய்த்தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்த வண்ணமே உள்ளது.

நோய்த்தொற்றை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன் அவற்றை அவதானித்தும் வருகின்றது.

மக்கள் தொகையில் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டமையால் நோய்த்தொற்றின் மோசமான பாதிப்புகள் குறைவாகவுள்ளது.

மேலும் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டோர் வீட்டில் இருந்து குணமடையும் நடைமுறையை சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும் சிங்கப்பூர் கொரோனா நோய்த்தொற்றினை சிங்கப்பூர் நிரந்தர நோயாக கருதி செயல்பட ஆரம்பித்துள்ளது.

கொரோனா நிலவரம் குறித்து பிரதமர் லீ சியன் லூங் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு பின்வருமாறு உரையாற்றினார்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சவால் மிகுந்த சூழலை சிங்கப்பூர் எதிர்கொண்டு வருகிறது.

சிங்கப்பூரர்கள் கொரோனா நோய்த்தொற்று பற்றிய மனப்போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். கொரோனாவை நிரந்தர நோய்த்தொற்றாகக் கருதி வாழும் உத்தியைத் தொடர வேண்டும்.

கொரோனாவோடு வாழ பழகிக் கொள்ள வேண்டும். கொரோனா பற்றிய அச்சத்தால் முடங்கிவிடக்கூடாது. உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி இயன்றவரை வழக்கமான, அன்றாடப் பணிகளைச் செய்ய வேண்டும்.

தற்போது டெல்டா வகை கொரோனா தொற்று குறைவடைந்துள்ளது. எனினும் நோய்த்தொற்று குறைவடையவில்லை. எனினும் சில ஒரு கட்டத்தில் பரவல் மெதுவடைந்துவிடும்.

ஏறக்குறைய ஒரு மாதத்திற்குள் நோய்த்தொற்று பாதிப்பு குறையக்கூடும். புதிய இயல்பு நிலையை அடைய மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிருமித்தொற்று மூலம் அதிகமாக 60 வயதை தாண்டிய மூத்தோர் மற்றும் 80 வயதை தாண்டிய தடுப்பூசி போட்ட மற்றும் போடாத மூத்தோர் ஆகியோர் நோய்த்தொற்றால் அதிகம் பாதிக்கப்படகூடும்.

இதனால் விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்ளும் படி அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்ட மூத்தோர் ‘பூஸ்டர்’ தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள முன் வர வேண்டும். என்று பிரதமர் லீ தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் கொரோனா நிலவரம்

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் வீட்டில் இருந்து குணமடையும் நடவடிக்கை.. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் என்ன செய்ய வேண்டும்.

சிங்கப்பூரில் அண்மைக்காலமாக நோய்த்தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது.

எனினும் சிங்கப்பூர் கொரோனாவுடன் வாழும் சூழலை நோக்கி செல்கின்றது.

இந்த நிலையில் தற்போது வீட்டில் இருந்து குணமடையும் திட்டத்தினை சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை அக்டோபர் 10 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டோர் சிலரை தவிர, ஏனையோர் அனைவரும் வீட்டில் இருந்தே குணமடையும் திட்டத்தினை சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

வீட்டில் இருந்து குணமடையும் திட்டம் பொருந்தாதோர்.

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதோர் அல்லது ஒருமுறை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள்;

80 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய தடுப்பூசி போட்டுக்கொண்ட மூத்தோர்;

மருத்துவர்கள் அறிவுறுத்திய ஒன்றிலிருந்து நாலு வயது வரையுள்ள பிள்ளைகள் ஒரு வயதுக்கும் குறைவான பச்சிளம் பிள்ளைகள்

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட, 12 இலிருந்து 69 வயது வரையுள்ளோருக்கு, வேறு கடுமையான உடல்நலக் கோளாறுகள் உடையோர்.

அறிகுறிகளுடன் நோய்வாய்ப்படுவோர் செய்ய வேண்டியது.

மருத்துவர் நோய்த்தொற்று இருப்பதாகச் சந்தேகித்தால், அவர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

பெரும்பாலானோருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளவேண்டிய தேவை இருக்காது.

நோய்த்தொற்று உறுதியானால், அவர்கள் வீட்டிற்குச் சென்று தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

மருத்துவர் சுகாதார அமைச்சுக்குத் தெரிவிப்பார். அமைச்சு, நோயாளியைத் தொடர்புகொண்டு, என்ன செய்யவேண்டும் என்று எடுத்துக்கூறும்.

தடுப்பூசி போட்டுக்கொண்டோர் 10 நாளுக்கும், போடாதோர் 14 நாளுக்கும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அவர்கள் கழிவறை கொண்ட தனியறையில் இருக்கவேண்டும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அது தற்போது தளர்த்தப்படும்.

அவர்கள் வீட்டிலிருந்து குணமடையும் திட்டத்தின் கீழ் வைக்கப்படுவர். வீட்டுச் சூழல் பொருத்தமாக இல்லாதவர்கள், தகுந்த பராமரிப்பு நிலையங்களை நாடலாம்.

தனிமைப்படுத்திக்கொள்ளும் காலத்தின் இறுதியில், அவர்களது Trace Together கருவி தானாகவே தகவல்களைப் புதுப்பித்து, “Discharged” என்று காட்டும்.

நோய்த்தொற்று உறுதி, ஆனால் அறிகுறிகள் இல்லை என்ன செய்ய வேண்டும்.

வழக்கமாகச் செய்யும் பரிசோதனையின்போதோ, உங்களுக்கு கிருமித்தொற்று இருப்பதாகக் கருவி காட்டுகிறது என்றால் என்ன செய்யவேண்டும்?

72 மணிநேரம் அதாவது 3 நாள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு மீண்டும் ART பரிசோதனை செய்துபார்க்கவேண்டும்.

தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தாலும், தானியக்க இயந்திரங்களுக்குச் சென்று இலவச ART பரிசோதனைக் கருவிகளைப் பெறலாம் என்று சுகாதார அமைச்சு சொன்னது.

நோய்த்தொற்று இல்லை என்று ART பரிசோதனை காட்டியவுடன், அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்வதிலிருந்து வெளிவரலாம், வழக்கமான நடவடிக்கைகளைத் தொடரலாம்.

இல்லையெனில் தொடர்ந்து தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இதற்கிடையில், காய்ச்சலோ, மூச்சுத் திணறலோ ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரைச் சென்று காணவேண்டும்.

தொலைமருத்துவச் சேவையையும் நாடலாம்.

ART பரிசோதனையில் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டு அறிகுறிகள் இல்லாத ஊழியர்கள், முடிந்தால் வீட்டிலிருந்து வேலை செய்யலாம்.

இல்லையெனில் அவர்கள் மருத்துவ விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். மருத்துவச் சான்றிதழ் தேவையில்லை

Leave a reply

Please enter your comment!
Please enter your name here