நாளொன்றுக்கு சுமார் 20 மணி நேரம் வரை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்கள் மீது நடவடிக்கை..!

0

நாளொன்றுக்கு சுமார் 20 மணி நேரம் வரை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்கள் மீது நடவடிக்கை..!

நாளொன்றுக்கு சுமார் 20 மணி நேரம் வரை வேலையில் அமர்த்திய நிறுவனங்கள் மீது மனிதவள அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Erawan Security Services மற்றும் Volantra Security ஆகிய நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட வேலை செய்யும் நேர வரம்புகளுக்கு அதிகமாக தங்கள் அதிகாரிகளை வேலையில் ஈடுபட வைத்ததற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளும் நாள் ஒன்றுக்கு 20 மணிநேரம் வரை வேலையில் அமர்த்திய நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட நேர காலத்தை விட அதிகமாக வேலையில் அமர்த்திய குற்றத்தினால் வேலைவாய்ப்பு சட்டத்தின்கீழ் குறித்த நிறுவனங்களுக்கு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வேலை நேரம் மற்றும் கூடுதல் நேர வரம்பு ஆகியவை தொடர்பாக கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான கிட்டத்தட்ட 200 தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை MOM ஆய்வு செய்தது.

இதில் சுமார் 36 சதவிகித நிறுவனங்கள் இந்த மீறல்களில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டது.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here