நிர்பயா கொலை வழக்கு ! குற்றவாளிகள் நால்வரும் இன்று காலை தூக்கிலிடப்பட்டனர்

0

டெல்லியில் வைத்து ஒடும் பேருந்தில் மருத்துவ மாணவி  நிர்பயா பாலியல் வன்கொடுமை  செய்யப்பட்டு, படுககொலை  செய்தசம்பவத்தில் குற்றவாளிகள் நால்வருக்கும் இன்று காலை  தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

குறித்த நால்வரும் இன்று காலை தூக்கிலிடப்பட்ட  நிலையில், குடும்பத்தினரை சந்திக்க வேண்டும் என்ற அவர்களின் கடைசி ஆசையும்நிறைவேற்றப்படவில்லை. இந்திய  ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2012ம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் சர்ச்சைகளை  ஏற்படுத்தியிருந்தநிலையில், 6 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதில் ஒருவர் சிறுவர் என்பதால் குறைந்தபட்ச தண்டனையுடன் விடுதலை செய்யப்பட்டிருந்தார். ஒருவர் திஹார் சிறையில் தற்கொலை  செய்துகொண்ட நிலையில், முகேஷ் சிங், பவன் குப்தா,  வினய் சர்மாமற்றும் அக்ஷய் குமார் சிங் ஆகிய நால்வருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது .

எனினும், கருணை மனு, நீதிமன்றத்தில் மேல்முறையீடு  என்று சட்டப்போராட்டம் நீடித்துக்கொண்டே போனதால்,  தண்டனையைநிறைவேற்றுவது தாமதமாகியது.  இந்நிலையில் , குற்றவாளிகள் நால்வருக்கும்  தனித்தனியே இன்று காலை 5.30 மணியளவில்  டெல்லிதிஹார் சிறையில் தூக்குதண்டனை  நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here