நீண்ட காலமாக நிலவும் வெளிநாட்டு ஊழியர்களின் லாரி பயணப் பிரச்சினைக்கு தீர்வு..!

0

சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த ஊழியர்களை தங்குமிடத்தில் இருந்து வேலையிடங்களுக்கு அழைத்துச் செல்ல நிறுவனங்கள் லாரிகளை பயன்படுத்துகிறன.

எனினும் லாரி பயணங்கள் பாதுகாப்பானதாக அமைந்தது இல்லை. ஊழியர்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் அதிகளவில் விபத்துக்குள்ளாகின்றன. இதனால் சில வெளிநாட்டு ஊழியர்கள் பலியாகியுள்ளனர்.

இதனால் பல வருடங்களாக லாரி பயணங்கள் குறித்து எதிர்ப்புகளும் விவாதங்களும் இடம் பெற்றது.

லாரிக்கு பதிலாக பஸ் அல்லது வேன்களை உபயோகிப்பது குறித்தும் பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

எனினும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs), ஊழியர்களுக்கு பேருந்துகளை வாடகைக்கு எடுப்பதற்கான செலவு தடையாக உள்ளதாக கூறியுள்ளன.

லாரி பயணங்களுக்கு மாற்றாக சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று, வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் செல்ல மினிபேருந்து வசதியை முன்பதிவு செய்வதற்கான தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இவ் நிறுவனம் குறைந்த செலவில் சேவையை வழங்கவுள்ளதால் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்ளக் கூடியதாக உள்ளது. என குறித்த நிறுவனத்தின் நிறுவனர் திரு ஜீன் கிரிஸ்டோபி லி.

இவ்வாறான லாரி பயணங்கள் குறித்து திரு. லீ தெரிவிக்கையில்..

“கால்நடைகளை போல லாரிகளில் ஊழியர்கள் பயணிக்கும் வழிமுறை ஒரு தசாப்த கால பிரச்சினை” என்றார்.

மேலும் , சமீபத்திய வாரங்களில், கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் மழை பெய்கிறது, அப்போது தங்களை மழையில் இருந்து காத்துக்கொள்ள ஊழியர்கள் குப்பைப் பைகளுக்குள் மறைந்து கொள்ள முயற்சிப்பதை நீங்கள் காணலாம், என்றார்.

மேலும் தங்கள் ஊழியர்களுக்கு சிறந்த மற்றும் பாதுகாப்பான போக்குவரத்தை வழங்க விரும்பும் நிறுவனங்களுக்கு உடனடி மாற்று விருப்பம் இந்த மினிபேருந்து சேவை என்றார்.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here