புலம்பெயர் தொழிலாளர்கள் நல வாரியத்தின் முக்கிய சேவைகள்..!

0

புலம்பெயர் தொழிலாளர்கள் நல வாரியத்தின் முக்கிய சேவைகள்..!

இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான ஊழியர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர்.

அவர்கள் பெரும்பாலும் துபாய் ,கத்தார் மலேசியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு தொழிலுக்காக செல்கின்றன.

இவர்கள் புலம்பெயர்ந்து தொழிலுக்காக வேறு நாடுகளுக்கு செல்லும் போது சில பிரச்சினைகளை முகம் கொடுக்கின்றனர்.

அவ்வாறு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக தமிழக அரசானது “புலம்பெயர் தொழிலாளர்கள் நல வாரியம்” ஒன்றை அமைத்துள்ளது.

இந்த வாரியத்தின் முக்கிய சேவைகளை பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது. அவை

1.புலம்பெயர் தொழிலாளர்களாக இருக்கும் தமிழர்கள் பற்றிய தரவு தளம் (DataBase) அமைக்கப்படும்.

2.பணியின் போது இறப்பவர்களின் குடும்பங்களுக்கு கல்வி மற்றும் திருமண உதவித்தொகை வழங்கப்படும்

3.தொழிலாளர்கள் ஆலோசனை பெருவதற்காக இலவச கட்டணமில்லாத தொலைபேசி, இணையதளம் மற்றும் மொபைல் அப்ளிக்கேஷன் உருவாக்கப்படும்.

4.அரசு மற்றும் தொழில் நிறுவங்களில் பாதுகாப்பாக முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்படும்

5.புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இலவச சட்ட ஆலோசனை உதவி மையம் உருவாக்கப்படும்.

6.நாடு திரும்பும் தொழிலாளர்களுக்கு கடன்வசதி மானியத்துடன் வழங்கப்படும்.

7.சொந்த ஊருக்கு உதவிட விரும்புபவர்களுக்காக “எனது கிராமம்” என்ற செயலி உருவாக்கப்படும்.

8.புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தமிழ் பயிற்றுவிக்கப்பட்டு அதற்கு உதவித்தொகை வழங்கப்படும்.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here