மலேசியாவில் தற்கொலைக்கு முயற்சித்த பெண் காரணம் என்ன?

0

மலேசியாவில் தற்கொலைக்கு முயற்சித்த பெண் காரணம் என்ன?

மலேசியாவில் சிலாங்கூர் சுங்கை பூலோவிலுள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 32வது மாடியில் இருந்து ஒரு பெண் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

எனினும் குறித்த பெண் சிலாங்கூர் தீயணைப்பு படையினரின் அதிரடி நடவடிக்கையால் அவரது முயற்சியை முறியடித்து பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

சிலாங்கூர் தீயணைப்பு மீட்பு படையினரான நோராசாம் காமிஸ் தெரிவிக்கையில் 7.52 மணிக்கு குறித்த தற்கொலை முயற்சி தொடர்பாக அவசர அழைப்பு கிடைத்ததாக தெரிவித்தார்.

அலனையடுத்து அவசர சேவை உதவி பிரிவினர் மற்றும் 19 தீயணைப்பு மீட்பு படையினரும் குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

அவர்கள் அஙகு செல்லும் போது குறித்த பெண் அடுக்குமாடி கட்டிடத்தின் 32வது மாடியின் ஓரத்தில் நினறுள்ளார்.

பின்னர் மீட்பு படையினரால் குறித்த பெண் சமாதணப்படுத்தி பாதுகாப்பாக கொண்டு செண்றுள்ளனர்.

அந்தப் பெண் வேலையை இழந்ததோடு தான் வசித்த வாடகை வீட்டிலிருந்து விரட்டப்பட்டதால் தற்கொலை முயற்சிக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பெண் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here