மீட்பு விமானம் ரத்து; சென்னையில் சிக்கிக்கொண்ட மலேசியர்கள்

0

கொரோனா கிருமி பரவலைத் தடுப்பதற்காக விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதால் இந்தியா சென்ற மலேசியர்கள் பலர் சென்னையில் சிக்கிக்கொண்டனர்.

செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) காலை 11 மணியளவில் 79 மலேசியர்களும் 14 இந்தியர்களும் மலிண்டோ ஏர்லைன்சின் சிறப்பு விமானத்தின் மூலம் மலேசியாவுக்குத் திரும்பவிருந்தனர்.

ஆனால் இந்திய அரசாங்கம் தரையிறங்க அனுமதி வழங்காததால் அந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

சென்னை விமான நிலையத்துக்கு வந்த பிறகே சிலருக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டது பற்றி தெரிய வந்தது. 

அவர்களில் சிலர் தங்கும் விடுதிகளை காலி செய்துவிட்டு 600 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்து சென்னை விமான நிலையத்துக்கு வந்திருந்தனர்.

மலேசியர்களில் குழந்தைகளும் முதியோரும் உள்ளனர். சிலருக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

விமான சேவை திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அனைவரும் சென்னையிலேயே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

தங்களை மீட்க விைரவில் விமானம் வரும் என்ற நம்பிக்கையோடு  அவர்கள் காத்திருக்கின்றனர்.

முன்னதாக பேசிய மலேசியாவின் துணை வெளியுறவு அமைச்சர் கமாருடீன் ஜஃபார், சென்னையில் மலேசிய விமானம் தரையிறங்க இந்திய அதிகாரிகளின் அனுமதிக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்தார்.

இதற்காக டெல்லியில் உள்ள அதிகாரிகளுடன் பேசி வருவதாகவும் அவர் சொன்னார்.

இதற்கிடையே சென்னையில் உள்ள மலேசியத் தூதரகம், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹோட்டல், உணவு, தங்குமிடம் போன்ற அத்தியாவசியமான தேவைகளின் தொடர்பில் உதவி வருகிறது.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here