மீண்டும் திருச்சிக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக மலிண்டோ(Malindo) விமான நிறுவனம் அறிவிப்பு..!

0

மீண்டும் திருச்சிக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக மலிண்டோ(Malindo) விமான நிறுவனம் அறிவிப்பு..!

மிக நீண்ட காலமாக கிருமித்தொற்று காரணமாக நிறுத்தப்பட்டு இருந்த சர்வதேச ரீதியிலான விமான பிரயாணங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை ஒவ்வொரு நாடுகளும் தளர்த்தி வருகிறது.

இத் தளர்வுகள் மூலம் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட பயணிகளுக்கு விமான பிரயாணங்களுக்கு அனுமதிகளை வழங்கி வருகிறது.

இந்தியாவில் கிருமித்தொற்று அபாயம் கூடிய நாடாக கருதப்பட்டதால் இந்தியாவுடனான விமான பிரயாணங்களுக்கு மலேசியா, சிங்கப்பூர், துபாய், அமீரகம் போன்ற அநேக நாடுகள் தடை விதித்தது.

எனினும் தற்போது பல நாடுகள் இந்தியாவுடனான விமான பிரயாணங்களை மீண்டும் தொடங்கியுள்ளது.

அந்த வரிசையில் மீண்டும் திருச்சிக்கான விமான பயணங்களை ஆரம்பிக்க உள்ளதாக மலேசியாவும் அறிவித்தலை விடுத்துள்ளது.

அந்த வரிசையில் சுமார் ஒன்றரை வருடங்களாக நீடித்த இந்தியாவுடனான விமான பயண தடையை தளர்த்தி மீண்டும் திருச்சிக்கான விமான பிரயாணங்களை தொடங்கவுள்ளதாக மலேசியாவின் மலிண்டோ(Malindo) விமான நிறுவனம் ஆனது அறிவித்துள்ளது.

இதனால் மலேசியாவில் பணிபுரியும் மற்றும் மலேசியாவுக்கு தொழிலுக்காக வர காத்திருக்கும் இந்திய ஊழியர்களுக்கு இவ் அறிவிப்பானது சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரின் இந்தியாவுடனான விமான பயணத்துக்கான தடை தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here