முடக்கநிலைக்கு எதிராக நடைபெறும் வலது சாரி ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவளிக்கும் அதிபர் டிரம்ப்

0

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், முடக்கநிலைக்கு எதிராக நடைபெறும் வலது சாரி ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

மினசோட்டா, மிச்சிகன், வெர்ஜீனியா ஆகிய மாநிலங்களில் நிலவும் முடக்கநிலையை எதிர்த்து நடைபெறும் ஆர்ப்பாட்டங்களை ஆதரிக்கும் வகையில் அவர் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சி ஆளுநர்களைக் கொண்ட அந்த மூன்று மாநிலங்களும் விடுவிக்கப்படவேண்டும் என்று திரு. டிரம்ப் கூறியுள்ளார்.

COVID-19ஐத் தடுக்க வர்த்தகங்களும் பள்ளிகளும் மூடப்பட்டிருக்கும்படி மினசோட்டா, மிச்சிகன், வெர்ஜீனியா ஆகிய மாநிலங்களின் ஆளுநர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

ஆனால், அத்தகைய தீர்மானம் வாழ்வாதாரத்தைப் பெரியளவில் பாதிப்பதாகவும் முடக்கநிலையை நீக்கும்படியும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதை ஆதரித்த திரு. டிரம்ப், எப்போது முடக்கநிலையைத் தளர்த்தவேண்டும் என்பதை அந்தந்த மாநில ஆளுநர்களே முடிவு செய்துகொள்ளலாம் என்று ஒரு நாளுக்கு முன்னர்தான் கூறியிருந்தார்.

கிருமித்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 36,000ஐத் தாண்டியுள்ள நிலையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அங்கு 690,000ஐத் தொட்டுவிட்டது.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here