முடக்கப்பட்டுள்ள அமெரிக்க நகரங்களில் மக்கள் ஆர்ப்பாட்டம்

0

அமெரிக்காவில் கிருமிப்பரவல் காரணமாக முடக்கப்பட்டுள்ள நகரங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர்.

முடக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளியல் பாதிப்புகளால் மக்களிடையே அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

நியூ ஹாம்ப்ஷியரில் (New Hampshire) உள்ள கான்கார்ட் (Concord) நகரில் சுமார் 400 பேர் மழையில் நின்றவாறு போராட்டம் நடத்தினர்.

அந்த மாநிலத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், நீட்டிக்கப்பட்ட முடக்கங்கள் தேவையில்லை என்று அவர்கள் கூறினர்.

டெக்ஸஸ் மாநிலத்தின் ஆஸ்ட்டின் நகரில் 250க்கும் மேற்பட்டோர் மாநில அரசாங்கக் கட்டடத்துக்கு வெளியே திரண்டனர்.

டெக்ஸஸ் மாநிலத்தை மீண்டும் திறக்க வேண்டும், மக்கள் மீண்டும் வேலைக்குச் செல்லவேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.

அரசாங்கம் அதன் பலத்தை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

ஒஹாயோ மாநிலத்தின் கொலம்பஸ் நகரம், கலிஃபோர்னியா மாநிலத்தின் சான் டியேகோ நகரம் ஆகியவற்றுடன் இண்டியானா, நெவாடா, விஸ்கோன்சின் மாநிலங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அவற்றில் சிலர் மட்டுமே பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடித்தனர்; பலர் அமெரிக்கக் கொடிகளை ஏந்தியவாறு நடந்தனர்.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here