லண்டனில் இரயில்களில் பயணிப்பதை தயவு செய்து தவிருங்கள் ! கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கில் முக்கிய அறிக்கை

0

லண்டனில் உள்ள சுரங்க இரயில்களை அவசர தேவைக்கு மட்டுமே பயன்படுத்துமாறும் , மற்ற நேரங்களில் பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் மேயர் சாதிக் கான் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார் .

கொரோனா பரவும் அபாயத்தை அடுத்தே இந்த அறிக்கையை மேயர் வெளியிட்டுள்ளார்.அதில் , இரயிலில் பயணிக்க நினைப்பவர்கள் ஒன்றுக்கு இருமுறை யோசிப்பார்கள் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் NHS ஊழியர்கள் மற்றும் கொரோனா தொடர்பில் பணியாற்றும் ஊழியர்கள் சிரமமின்றி பொது போக்குவரத்தில் பயணிக்க வேண்டும். சுரங்க இரயில்களில் கூட்டம் குறைவாக இருந்தால் கொரோனா வைரஸ் ஒருவரிடம் ஒருவருக்கு தொற்றாது.

கொரோனாவால் பாதித்தவர்களை பாதுகாக்க பணியாற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக இருக்க லண்டன்வாசிகள் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும்.

அப்படி நீங்கள் பணிக்கு செல்ல வேண்டியிருந்தால் தயவு செய்து அவசர நேரத்தில் இரயிலில் பயணிக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது . லண்டன் போக்குவரத்து துறை வெளியிட்ட தகவலின் படி காலை 5.45 மணியில் இருந்து 7.30 மணி வரையிலும், மாலை 4 மணியில் இருந்து 5.30 மணி வரையிலும் இரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என தெரியவந்துள்ளது.

இந்த நேரத்தில் பயணிகள் இரயில் சேவையை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு மேயர் கேட்டு கொண்டுள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு

Leave a reply

Please enter your comment!
Please enter your name here