விடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தினந்தோறும் வெளியே செல்ல அனுமதி..!

0

நோய்த்தொற்றை தொடர்ந்து விதிக்கப்பட்ட விடுதிகளில் வசிக்கும் புலம்பெயர்ந்த ஊழியர்களுக்கான நடமாட கட்டுப்பாடுகள் சுமார் ஒன்றரை வருடங்களாக நீடித்தது.

எனினும் கடந்த காலங்களில் ஊழியர்களை வெளியே செல்ல அனுமதிப்பதற்கான முன்னோடித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத் திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட அளவு ஊழியர்கள் குறிப்பிட்ட நாட்களில் லிட்டில் இந்தியா போன்ற பகுதிகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது இத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு சுமார் 3000 ஊழியர்கள் தினமும் வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வெளியே செல்ல அனுமதிக்கப்படுபவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

விடுதியில் 98 சதவீதமானோர் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

தினமும் 8 மணிநேரம் பொழுதுபோக்கு மையங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

வெளிநாட்டு ஊழியர்கள் சமூகம் சார்ந்த இடங்கள் பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்வதற்கு முன்பு ஏ. ஆர்.டி பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

இவ் அனுமதி எதிர்வரும் மாதம் 03ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here