விமான பயணத் தடையால் விரக்தியில் மக்கள்…!

0

நோய்த்தொற்று பரவலால் சிங்கப்பூர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து சர்வதேச விமான பிரயாணங்களுக்கான தடை விதிக்கப்பட்டது. இத் தடை சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தொடர்கின்றது.

இந்த பயணத் தடை காரணமாக பலரினது வாழ்க்கை தரம் மோசமாக பாதிப்படைந்துள்ளது. இதனால் மக்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

தற்போதைய நோய்த்தொற்று சூழலில் விமான பயண தடையால் ஊழியர்கள் தமது அன்புக்குரிய உறவுகளை பிரிந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதே போல் விடுமுறையில் தமது தாயகம் செல்லவும் முடியாத நிலை நிலவுகிறது.

பெரும்பாலானோர் இவ் விமான தடையால் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த இயலாது. இவ் பயண கட்டுப்பாடுகள் தேவையற்றவை என கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் சிறந்த நிருவாகம் மூலம் பாதுகாப்பான பயணங்கள் மூலம் நோய்த்தொற்று பரவலை கட்டுப்பாடுடன் வைத்திருக்க முடியும் என தெரிவிக்கின்றனர்.

சிங்கப்பூரில் அதிகளவானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டதை தொடர்ந்து மீண்டும் விமான பயண கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்கப்படும் என சிங்கப்பூர் அரசு அறிவித்திருந்தது.

தற்போது பெரும்பாலானோர் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டதை தொடர்ந்து முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட பயணிகளுக்கு பயணப் பாதை திட்டதை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதிகளவு பயணிகள் சிங்கப்பூர் வருவதில் ஆர்வம் செலுத்துகின்றனர்.

இவ்வாறு முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட பயணிகளுக்கான பயணப் பாதை திட்டம் மூலம் வருகை தரும் பயணிகள் தனிமைப்படுத்தல் இன்றி பயணம் செய்ய முடியும்.

சில வாரங்களாக இத் திட்டம் சில நாடுகளுடன் நடைமுறையில் இருந்து வந்தது.

எனினும் இதனை விரிவுபடுத்தி அதிக விமானங்களை இயக்கி அதிகளவு பயணிகளை சிங்கப்பூர் அழைத்து வர சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.

SIA வின் வர்த்தகத் துணைத் தலைவர் திரு லீ லிக் ஹ்சின் கூறுகையில் : “சிங்கப்பூர் VTL திட்டம் 11 நாடுகளுக்கு விரிவுபடுத்துவது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த செய்தியாக இருக்கும் என்றார்.

மேலும் தெரிவிக்கையில் “அவர்கள் இப்போது எளிதாக தங்கள் அன்புக்குரியவர்களுடன் மீண்டும் ஒன்றிணையலாம் அல்லது வெளிநாட்டு விடுமுறையில் செல்லலாம்” என்று அவர் கூறினர்.

சிங்கப்பூர் சிவில் ஏவியேஷன் ஆணையம் (CAAS) சனிக்கிழமை (அக்டோபர் 9ம் தேதி) சிங்கப்பூர் தடுப்பூசி டிராவல் லேன் (VTL) திட்டத்தை வரும் வாரங்களில் மேலும் ஒன்பது நாடுகளுக்கு விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது.

அக்டோபர் 19ம் தேதி முதல், தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் கனடா, டென்மார்க், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் பயணிக்க முடியும்.

நவம்பர் 15ம் தேதி முதல் தென் கொரியாவுக்கும் பயணிக்க முடியும் என்று போக்குவரத்து அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 8) அறிவித்தது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் போன்ற முக்கிய நாடுகளுடனான விமான பயண தளர்வு இன்னும் வழங்கப்படவில்லை. எனினும் சிங்கப்பூர் அரசு படிப்படியாக எல்லைகளை திறந்து வருகின்றது.

இதனால் இவ் ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மேற்குறிப்பிட்ட நாடுகளுடனான விமான பயணங்களும் அனுமதி வழங்கப்பட கூடும்.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here