வெளி­நாட்­டு­வாழ் இந்­தி­யர்­கள் வாக்­க­ளிப்­ப­தற்­கான வச­தியை ஏற்­ப­டுத்தித் தர இய­லாது என்று மத்­திய அரசு தெரிவித்துள்ளது.

0

நீண்டநீண்ட நாள்­க­ளாக வெளி­நாட்­டு­வாழ் இந்­தி­யர்­கள் தபால் மூலம் வாக்­க­ளிக்க வச­தி­யாக தேர்­தல் நடத்தை விதி­மு­றை­களில் மாற்றங்கள் செய்ய வேண்­டும் எனும் கோரிக்க இருந்து வருகிறது.

இந்தியாவில் நடை­பெறவுள்ள ஐந்து மாநில தேர்­த­லில் வெளி­நாட்­டு­வாழ் இந்­தி­யர்­கள் அஞ்சல் மூலம் வாக்­க­ளிக்க இய­லாது என மத்­திய அமைச்­சர் ரவி­சங்­கர் பிர­சாத் தெரி­வித்தார்.

படிக்க:வேலை இடங்களில் ஊழியர்களின் அனுமதி 75 சதவீதமாக அதிகரிப்பு.

நீண்ட நாள்­க­ளாக இருந்து வரு­கின்ற கோரிக்கையான வெளி­நாட்­டு­வாழ் இந்­தி­யர்­கள் தபால் மூலம் வாக்­க­ளிக்க வச­தி­யாக தேர்­தல் நடத்தை விதி­மு­றை­களில் மாற்றங்கள் செய்ய வேண்­டும் எனும் கோரிக்கை தொடர்­பாக மத்­திய வெளி­யு­றவு அமைச்­சு­டன் தேர்­தல் ஆணை­யம் தீவி­ர­மாக ஆலோ­சித்து வரு­கிறது.

இந்­நி­லை­யில் ஐந்து மாநி­லத் தேர்­த­லில் வெளி­நாட்­டு­வாழ் இந்­தி­யர்­கள் வாக்­க­ளிக்க அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­களா எனும் எதிர்­பார்ப்பு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் உட்பட அநேக மக்கள் மத்தியில் நிலவி வந்­தது.

படிக்க:சிங்கப்பூரில் இருந்து தமிழகத்துக்கு அதிகமான விமானங்கள் ஏப்ரல் மாதம் முதல் இயக்கப்பட உள்ளது.

எனி­னும் தற்­போ­துள்ள சூழ்­நி­லை­யில் வெளி­நாட்­டு­வாழ் இந்­தி­யர்­கள் வாக்­க­ளிப்­ப­தற்­கான வச­தியை ஏற்­ப­டுத்தித் தர இய­லாது என்று மத்­திய அரசு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் உட்பட வேறு நாடுகளில் உள்ள இந்திய ஊழியர்கள் ஐந்து மாநி­லத் தேர்­த­லில் வாக்களிக்க முடியாது.

படிக்க:சிங்கப்பூருக்கு நாடு திரும்பும் வெளிநாட்டு ஊழியர்கள் குறைவடையலாம்.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here