வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் பற்றிய விழிப்புணர்வு..

0

வெளிநாட்டு வாழ்க்கையும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களும் யாராலும் யூகிக்க முடியாத ஒரு விடயமாகும்.

தன் குடும்பத்தில் ஒருவர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றிருந்தால் தன் குடும்பத்திற்குள் பெருமிதம் கொள்பவர்களே அதிகம்.

ஆனால் அவ்வாறு சென்றவர் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களையும் கஷ்டங்களையும் பற்றி ஒருபோதும் அறிந்திருக்க மாட்டார்கள்.

அவ்வாறு சென்றவர் தான் பெரும் கஷ்டங்களையும் துன்பங்களையும் தன் குடும்பத்தார் பகிர்ந்து கொள்ளவும் மாட்டார் என்பதே உண்மை.

அதிலும் குறிப்பாக பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைந்த ஒரு நாட்டிற்கு தொழிலுக்காக சென்றவர்கள் பெரும் கஷ்டங்கள் பற்றி அறிவது மிகக் குறைவு.

அந்த வகையிலேயே சிங்கப்பூர் கட்டார் துபாய் போன்ற நாடுகளுக்கு சென்றவர்கள் படும் கஷ்டங்கள் பற்றி அறியாதவர் மிக ஏராளமாக உள்ளன.

இவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளும் கஷ்டங்களும் பற்றிய விழிப்புணர்வாக சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட குறும்படம் தெளிவாக வெளிநாட்டு ஊழியர்கள் படும் கஷ்டங்களை வெளிப்படுத்தியது.

இப்படத்தில் வரும் கேரக்டர் மாதவன். இவரின் மாத சம்பளம் 450 வெள்ளியாகும்.இவரது அப்பணத்தை ஏடிஎம் இல் இருந்து பெற்று 300 வெள்ளியை தனது குடும்பத்திற்கு அனுப்பி வைக்கின்றார்.

பின்னர் தனது தேவையான மளிகை சாமான்கள் வாங்கி எஞ்சிய பணம் இறுதி 8 வெள்ளிகள் மாத்திரமே அப்பணத்தை முடி வெட்டுவதற்காக செலவழிக்கிறார்.

Migrant worker

அங்கே நான் சாப்பிடுவதற்கு தற்போது அவரிடம் பணம் இல்லாமல் உள்ளது தற்சமயம் தனது அம்மா கால் பண்ணு நலம் விசாரிக்கும் போது தான் சாப்பிட்டு விட்டதாக கூறுகிறார் இவ்வாறே வெளிநாட்டு வாழ்க்கையை அதிகமானவர்கள் வாழ்கின்றனர்.

இவ்வாறானவர்கள் தனது ஏஜென்சி செலவை அடைக்கவே இரண்டு வருடங்கள் ஆகின்றன பின்னரே அவர்கள் தமக்குத் தேவையான சேமிப்பை தொடங்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

இந்த உண்மையான எதார்த்தத்தைச புரியவைக்க முகமாய் குறும்படம் இருந்தது இதனால் அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தின் மூலம் வெளிநாட்டு வாழ்க்கையின் கஷ்டங்களையும் அக் கஷ்டங்களை தன் குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ளாமல் தவிக்கும் ஊழியர்களின் நிலைமையையும் அனைவருக்கும் எடுத்துக் காட்டுகின்றது.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here