வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் சென்ற லாரி விபத்தில் இரு வெளிநாட்டு ஊழியர்கள் உயிரிழப்பு..!

0

கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் சென்ற லாரி டிப்பர் ஒன்றில் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

ஊழியர்களை ஏற்றிச் சென்ற லாரியானது சாலையில் சென்றபோது சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த டிப்பர் லாரியின் பின்பக்கத்தின் மீது மோதியது.

இதனால் ஊழியர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தில் இருந்த 17 ஊழியர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.

அவர்களுள் மிகவும் அதிக காயங்கள் ஏற்பட்ட இரு ஊழியர்கள் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் சிக்கி, இந்தியாவைச் சேர்ந்த வயது 28 வயதுடைய சுகுணன் சுதீஷ்மன் மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்த வயது 33 வயதுடைய டோஃபைசல் ஹுசைன் ஆகிய இருவரும் அதிக காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இருப்பினும் அவர்கள் இருவரின் உடலின் பல்வேறு பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இவ் விபத்து தொடர்பான விசாரணைகள் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

லாரி டிரைவரின் கவனக்குறைவாலும், அலட்சியத்தாலுமே இந்த விபத்து நடந்துள்ளதாக விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

விபத்து ஏற்படுவதற்கு காரணமான 36 வயதுடைய அந்த லாரி
ஓட்டுநரை நீதிமன்றத்தில் மூத்த புலன் விசாரனை அதிகாரி அஸிஸ் தஹார் விசாரித்துள்ளார்.

டிரைவர் ஜாலான் பஹாரில் தமது உயர் அதிகாரியை ஏற்றிச் செல்வதற்காக நகரத்தின் விரைவுப் பாதையில் வேகமாகச் சென்றதாக தெரியவந்துள்ளது.

இதன்போதே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here