19 வயது இளைஞர் உயிரிழப்பு ! கொரோனா தொற்றியதாக இறந்த பின்னரே தெரியவந்துள்ளதென தகவல்

0

ஆரோக்கியமான இளைஞரொருவர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது . அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது இறந்த பின்னரே தெரியவந்துள்ளதாகவும் , முன்னரே கண்டறியப்பட்டிருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் எனவும் இத்தாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

பேஸ்புக் இல் எம்முடன் இணைந்திருங்கள்

கிழக்கு இத்தாலியின் நிரேடோ நகரை சேர்ந்த 19 வயதான லுகா டி . நிக்கோலா கடந்த 24ஆம் திகதி வடக்கு லண்டனில் உள்ள மிடில்செக்ஸ் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார் . அந்த இளைஞன் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் இருமல் மற்றும் காய்ச்சல் இருந்துள்ளதுடன் அவருக்கு சளி இருக்கவில்லை என இத்தாலிய பத்திரிக்கை லா ரிப்பப்ளிகா தெரிவித்துள்ளது இது குறித்து மிடில்செக்ஸ் மருத்துமனையில் செய்தி தொடர்பாளர் தெரிவிக்கையில் , 19 வயதான இளைஞன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தது சோகமானது . இறந்த பின்னர் பரிசோதித்த போதே அவருக்கு கொரோனா தொற்றியுள்ளது கண்டறியப்பட்டது .

இந்த இளைஞன் சிகிச்சைக்காக இத்தாலிக்கு திரும்பி இருந்தால், நிலைமை வேறு மாதிரியாக இருந்திருக்கும் என நிரேடோ நகர துணை மேயர் மரியா ஏஞ்சலா லெலி குறிப்பிட்டுள்ளார்.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here