திறமையை நிரூபித்தால் வாய்ப்பு இல்லையா?

0

இலங்கை அணியின் 6ம் இலக்க துடுப்பாட்ட வீரருக்கான இடத்திற்கு பொருத்தமான வீரர்கள்

6ம் துடுப்பாட்ட வீரராக களமிறங்கும் வீரர் வேகமாக துடுப்பெடுத்தாடி ஓட்ட எண்ணிக்கையை வேகமாக உயர்த்தக கூடிய அதிரடி பேடஸ்மன் ஆக இருப்பார்.

இதுவரை இலங்கை அணியின் ஒருநாள் போட்டிகளில் 6ம் இலக்க துடுப்பாட்ட வீரராக திசார பெரேரா இருந்து வந்துள்ளார.அவர் திடீரென ஓய்வை அறிவித்த பின் தசுன் சானக்க பங்களாதேஷ் தொடரில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்டார்.எனினும் அவரால் சிறப்பாக நிலைநின்று விளையாட முடியவில்லை.

இலங்கை அணியில் வாய்ப்பு வழங்கப்படாமல் உள்ள சிறப்பான திறமை மிக்க அதிரடி துடுப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ச பாகிஸ்தான் உடனான டி20 தொடரில் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை கதிகலங்க வைத்த வீரர்.ஆனால் இலங்கை அணியில் வாய்ப்பு வழங்கப்படாமல் உள்ளது கவலையளிக்கின்றது.

பானுக ராஜபக்ச பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியாவுடனான டி 20 போட்டியில் பெற்றுககொண்ட ஓட்டங்கள்

32(22) vs pak
77(48). vs pak
3(8) vs pak

2(6). vs aus
17(11)not out. vs aus

அவர் விளையாடிய 5 போட்டிகளில் 1 போட்டியில் 50+. ஒரு போட்டியில் 30+ ஒரு போட்டியில் 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.இப் போட்டியில் 7ம் இழக்க துடுப்பாட்ட வீரராக களம் இறங்கினார. இரண்டு போட்டிகளில் மாத்திரமே சொதப்பினார்.

தொடர்ந்து சொதப்பும் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கும் தேர்வுககுழு திறமையை வெளிக்காட்டிய வீரர்களுக்கு வாயப்பை மறுக்கினறது என்பது மறுக்க முடியாத உண்மை. டி20 உலக கிண்ணத்தை தற்போது எதிர் கொள்ள உள்ள நிலையில் பானுக ராஜபக்ச விற்கு டி20 யில் வாய்ப்பு ஒன்று வழங்கப்படிருக்க வேண்டும்.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here