இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வருவதற்கு விண்ணப்பிக்கும் தேதி வெளியிடப்பட்டது.

0

தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கான பயணப்பாதை திட்டம் (VTL) மூலம் பல நாடுகளில் இருந்து பயணிகள் சிங்கப்பூர் வருகினறனர்.

இப் பயணப் பாதை திட்டம் பல நாடுகளுக்கு அண்மை காலமாக விரிவுபடுத்தப்பட்டு வந்து அதிகளவு பயணிகள் சிங்கப்பூர் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இவ் தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கான பயணப்பாதை திட்டம் இந்தியா, இந்தோனேஷியா, கத்தார், சவுதி அரேபியா, மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகளுடன் விரிவுபடுத்தப்படவுள்ளது.

இதனால் இக் குறித்த நாடுகளில் இருந்து தடுப்பூசி போட்டுக் கொண்ட பயணிகள் சிங்கப்பூர் வர அனுமதிக்கப்படுவர்.

நவம்பர் 29, முதல் இந்தியா மற்றும் இந்தோனேசியாவுடன் சிங்கப்பூர் VTL பயண ஏற்பாட்டை அறிமுகப்படுத்த இருப்பதாக சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று(நவம்பர் 15) அறிவித்தது.

இந்தியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து வரும் குறுகிய கால வருகையாளர்கள் மற்றும் நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்களுக்கான VTL விண்ணப்பங்கள் நவம்பர் 22, முதல் தொடங்கும்.

மேலும் கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுடன் அடுத்த மாதம் டிசம்பர் 6ஆம் தேதி முதல் இத் திட்டத்தின் கீழ் சிங்கப்பூர் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு நவம்பர் 29 முதல் VTL விண்ணப்பங்கள் தொடங்கும்.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here