உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை – புலம்பெயர்ந்த ஊழியர்கள் கவலை

0

உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை – ஊழியர்கள் கவலை

சிங்கப்பூர் ஆனது வெளிநாட்டு ஊழியர்களை அதிகளவில் கொண்ட நாடாக கருதப்படுகின்றது. அதிலும் குறிப்பாக இந்தியா, பங்களாதேஷ் போன்ற தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

சிங்கப்பூரில் கட்டுமானம் கப்பல் மற்றும் பணிப்பெண்கள் என அனைத்து துறையையும் வெளிநாட்டு ஊழியர்கள் அதிக அளவில் காணப்படுகின்றனர்.

நோய்த்தொற்றுக்கு முன்னர் மொத்த ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கினர் வெளிநாட்டினர் என புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

எனினும் நோய்த்தொற்று கட்டுப்பாடுகளையடுத்து அநேகமானோர் தமது தாயகம் திரும்பியதுடன் ஊழியர்கள் சிங்கப்பூர் வரவும் முடியாத சூழ்நிலை காணப்பட்டது.

இதனால் தற்போது சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படுகிறது.

தமது வாழ்வாதாரத்திற்காக சிங்கப்பூர் வருகை தந்த ஊழியர்களில் பெரும்பாலானவர்களின் சம்பளம் முறையாகவும் சரியாகவும் வழங்கப்படவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நிறுவனங்கள் ஒப்பந்தப்படி கூறிய சம்பளத்தையும் முறையாக வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

சில முதலாளிகள் நியாயமான சம்பளத்தை முதலில் வழங்குவது போல் வழங்கி விட்டு பின்னர் அதிலிருந்து ஒரு தொகையை மீண்டும் வாங்கிக் கொள்கின்றனர் என அதிகளவான முறைப்பாடுகள் கடந்த காலங்களில் கிடக்கப்பெற்றுள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Migrant worker

இவ்வாறு வெளிநாட்டு ஊழியர்கள் சம்பளதில் முறைகேடு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளதிருந்தது.

வெளிநாட்டு ஊழியர்கள் கூறியபடி ஒழுங்காக தமது சம்பளம் கிடைக்காததால் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.

ஏனெனில் அவர்கள் வாழ்வாதாரத்திற்காக சிங்கப்பூர் வர பெருந் தொகை பணம் செலுத்த வேண்டியுள்ளது.

இதனால் இவர்கள் தமது தேவை, குடும்பத்தேவை, ஏஜென்சிக்கு செலுத்த வேண்டிய பணம் என அவர்கள் அந்த குறைவான சம்பளத்தையும் செலவிடுகின்றனர்.

இதனால் அன்றாட தேவையை நிறைவேற்றிக் கொள்ளவும் தமது சேமிப்பிற்கும் சிறிதளவு பணம் கூட எஞ்சவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.சில நாட்கள் பட்டணியுடன் கழிக்க வேண்டிய நிலையிலும் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இவர் தமது வாழ்க்கையில் ஒரு விடிவு காலம் பிறக்கும் என நம்பி வந்தவர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

தமது உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தை வழங்குவதில்லை என பெரும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here