இந்திய விமானங்களுக்கு சுமார் 50% வரை தள்ளுபடி வழங்குகிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்..!

0

மீண்டும் சிங்கப்பூர்-இந்தியா இடையே பறக்க தயாராகும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கான பயணிகள் விமானச் சேவைகளை வரும் 29ஆம் தேதி மீண்டும் தொடங்கவிருக்கிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நோய்த்தொற்று காரணமாக சர்வதேச விமான பயணங்களுக்கு சிங்கப்பூர் அரசு தடை விதித்திருந்தது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மோசமாக பாதிப்புக்குள்ளானது.

எனினும் தற்போது மீண்டும் சிங்கப்பூர் இயல்பு நிலைக்கு திரும்புகின்றது. கட்டுக்கட்டாக அவதானத்துடன் இயல்பு நிலைக்கு சிங்கப்பூர் திரும்புகின்றது.

தற்போது மீண்டும் சிங்கப்பூர்-இந்தியா இடையிலான விமான பயண சேவை இம் மாதம் 29ஆம் தேதி முதல் ஆரம்பமாகவுள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கான பயணிகள் விமானச் சேவைகளை வரும் 29ஆம் தேதி மீண்டும் தொடங்கவிருக்கிறது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் இயங்கவுள்ள நகரங்கள்

VTL மற்றும் VTL அல்லாத விமான சேவைகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமானது இந்தியாவின் பிரதான 8 நகரங்களிலிருந்து பயணிகள் விமானச் சேவைகளை வழங்கவுள்ளது

சென்னை, டில்லி, மும்பை நகரங்களிலிருந்து சிறப்புப் பயண ஏற்பாட்டின்கீழ்(VTL)இயங்கும் விமானங்கள் இயங்கும். இதில் வரும் இந்திய பயணிகள் சிங்கப்பூரில் தனிமைப்படுத்தல் இன்றி சிங்கப்பூர் நுழைய முடியும்.

மேலும் அகமதாபாத் (Ahmedabad), பெங்களூர் (Bangalore), ஹைதராபாத் (Hyderabad), கொச்சி (Kochi), கொல்கத்தா (Kolkata) ஆகியவற்றில் இருந்தும் பயணிகள் விமானச் சேவை .வழங்கப்படும். இவை

VTL திட்டத்தின் கீழ் அல்லாத விமான சேவையாகும்.

இந்திய விமானங்களுக்கு 50% வரை தள்ளுபடி வழங்குகிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

இந்த தருணம் மிக முக்கியமானது ஏனெனில் 20 மாத நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவுக்கான பயணிகள் விமானங்களை மீண்டும் தொடங்கவுள்ளோம். என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், இந்தியாவின் பொது மேலாளர் சை யென் சென் (Sy Yen Chen) கூறினார்.

சுற்றுப்பயணக் கட்டணங்கள் மொத்தம் ரூ.13,000இலிருந்து தொடங்கும்.

Scoot விமானங்கள் திருச்சி, அமிர்தசரஸ் (Amritsar), ஹைதராபாத் ஆகியவற்றுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே சேவை வழங்கும்.

Leave a reply

Please enter your comment!
Please enter your name here